பாடல் #38391
இயேசுவை காண்பது
🔤 Yesuvai Kaanpathu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது அவரில் மகிழ்வது என் இன்பக் கீதமே பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில் பகலும் இரவும் பாடும் பாக்கியமே போதுமே தாமதமாவதால் தவிக்குதென் உள்ளமே தாரணியை தினம் மனம் வெறுக்குது என்றுமே நரர்வினை பெருகுதே நாசபுரம் மகிழுதே நேசரே உம் வருகைக்காய் என் மனம் தினம் உருகுதே செடியில் நில்லாக் கொடிகள் சீரழிந்து காயுது சீர் இயேசு மார்பை தேடி எந்தன் தலை சாயுது அல்லல் தொல்லை மறந்து ஆண்டவன் அடிபணிந்து எல்லையில்லா துதியில் என்றும் மகிழ்ந்திட ஆகாயத்தில் எக்காளம் என்று முழங்குமோ எப்போ உம் ஜீவ ஜோதி என்னில் இறங்குமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Kaanpathu Avarotu Vaazhvathu Avaril Makizhvathu En Inbak Keedhamae Parisutthavaankalotu Allaelooyaa Koottatthil Pakalum Iravum Paatum Paakkiyamae Pothumae Thaamathamaavathaal Thavikkuthen Ullamae Thaaraniyai Thinam Manam Verukkuthu Enrumae Nararvinai Perukuthae Naasapuram Makizhuthae Naesarae Um Varukaikkaay En Manam Thinam Urukuthae Setiyil Nillaak Kotigal Seerazhinthu Kaayuthu Seer Yesu Maarpai Thaeti Endhan Thalai Saayuthu Allal Thollai Maranthu Aandavan Atibaninthu Ellaiyillaa Thuthiyil Enrum Makizhnthida Aakaayatthil Ekkaalam Enru Muzhangkumo Eppo Um Jeeva Jothi Ennil Irangkumo