பாடல் #38376
அலையும் கொடிகள்
🔤 Alaiyum Kotigal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலையும் கொடிகள் அலருகின்றோம் செடியே சேர்த்தணைக்கும் அன்பே அப்பா பிதாவே புத்திர சுவிகார ஆவியினால் என்னை தேற்றிடுமே புது பெலத்தால் புது கிருபை தந்தீர் புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர் திரும்பவும் நீர் என்னை தேடி வந்தீர் திரு புது கவியால் பாடச் செய்தீர் கனி செடி உம்மில் நான் நிலைத்திருக்க கொடியாய் உமக்குள் படர்ந்திலங்க களை பிடுங்கி நீர் கிளை நறுக்கி சுத்தம் செய்ய என்னை சோதித்திட்டீர் பொறுமையுடன் நான் காத்திருந்தேன் சாய்ந்தென் கூப்பிடுதலைக் கேட்டீர் நெருக்கத்திலே நான் உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் விழுந்திட்ட தாவீதின் கூடாரத்தை திரும்பவும் எடுப்பித்து சீர்படுத்தி கர்த்தரை தேடும் மீதியானவரும் களிப்புடன் சியோனில் சிறந்திலங்க சிறு மந்தையே நீ பயப்படாதே என்றென்னை தேற்றும் நல்லாயனே வலது இடதுபுறம் சாயாமல் உம் கோலும் தடியும் என்னை தேற்றிடுதே இந்த வனாந்திர யாத்திரையில் இயேசுவின் சமூகம் முன் செல்லுமே போகையிலும் நம் வருகையிலும் புகலிடமே புது அடைக்கலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaiyum Kotigal Alarukinrom Setiyae Saertthanaikkum Anpae Appaa Pithaavae Putthira Suvikaara Aaviyinaal Ennai Thaerritumae Puthu Pelatthaal Puthu Kirupai Thantheer Puthu Enneyaal Ennai Apishaekittheer Thirumbavum Neer Ennai Thaeti Vantheer Thiru Puthu Kaviyaal Paadach Seytheer Kani Seti Ummil Naan Nilaitthirukka Kotiyaay Umakkul Patarnthilangga Kalai Pitungki Neer Kilai Narukki Suttham Seyya Ennai Sothitthitteer Porumaiyudan Naan Kaatthirunthaen Saaynthen Kooppitudhalaik Kaetteer Nerukkatthilae Naan Ummai Azhaitthaen Nerungki Udhavi Enakkalittheer Vizhunthitta Thaaveethin Kootaaratthai Thirumbavum Etuppitthu Seerpatutthi Karttharai Thaetum Meethiyaanavarum Kalippudan Siyonil Siranthilangga Siru Manthaiyae Nee Payappataathae Enrennai Thaerrum Nallaayanae Valathu Idathupuram Saayaamal Um Kolum Thatiyum Ennai Thaerrituthae Indha Vanaanthira Yaatthiraiyil Yesuvin Samoogam Mun Sellumae Pokaiyilum Nam Varukaiyilum Pugalidamae Puthu Ataikkalamae