பாடல் #38367
கோடா கோடி ஸ்தோத்திரம்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி கோமான் இயேசுவில் மகிழுவேன் ஆ ஆ ஆ ஆனந்தம் அன்பின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன் நான் மீட்கப்பட்டேன் பாவி யான் தொழுதேன் நின்பாதாரவிந்தம் பட்சம் வைத்தாளும் எனக்கதுவே ஆனந்தம் தாயின் வயிற்றிலே தற்காப்பு தந்தாய் பேயின் மோசங்களில் நின்றென்னை காத்தாய் காயம்,உயிரும் கருத்தோடு நீட காலையும், மாலையும் துதித்தும்மை பாட கவலை நேரத்தில் ஆறுதல் அளித்தார் கைகளில் எடுத்தெந்தன் கண்ணீரை துடைத்தார் துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும் இன்பக் கிறிஸ்துவில் என் மனம் ஆறும் நெருக்கத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் இறங்கி எனக்கவர் செவி கொடுத்திட்டார் சிலவேளை தம்முகத்தை இமைப் பொழுது மறைத்தார் சிருஷ்டிகர் திரும்பவும் கிருபை அளித்தார்