பாடல் #38364
புது பாட்டு பாடுவேன்
🔤 Puthu Paattu Paatuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது பாட்டு பாடுவேன் பொன்னகரிலே அண்ணல் இயேசு தரிசனத்தில் அகமகிழ்வேன் நான் - அங்கே அன்பென்னும் அரணிலே அவரளித்த ஊற்றிலே மூழ்கி குளித்தவர் அங்கே துதித்து பாடுவார் (2) அன்பென்னும் அழைப்பிலே அவரளித்த ஊற்றிலே ஆட்டுக்குட்டியின் விளக்கிலே நடந்துலாவுவார் (2) ஆவியின் அபிஷேகம் அச்சாரமாய் பெற்றவர் அவருடைய மகிமையில் மகிழ்ந்து பாடுவார் (2) ஏகன் இயேசு சிலுவையில் தேகம் அறையக் கொடுத்தவர் பாடுதுன்பம் நீங்கி அவரில் பாடி மகிழுவார் (2) கிறிஸ்துவுடன் ஆளுகை செய்ய கிருபைப் பெற்ற சுத்தர்கள் கிரீடம் சூடும் நேரம் என்ன கிருபானந்தமே (2) பூவுலகில் ஒருவராலும் பாடக்கூடா பாட்டது மீட்கப்பட்டோர் மாத்திரம் பாடும் மீட்பின் கீதமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Paattu Paatuvaen Ponnakarilae Annal Yesu Tharisanatthil Agamakizhvaen Naan - Angkae Anpennum Aranilae Avaralittha Oorrilae Moozhki Kulitthavar Angkae Thuthitthu Paatuvaar (2) Anpennum Azhaippilae Avaralittha Oorrilae Aattukkuttiyin Vilakkilae Natanthulaavuvaar (2) Aaviyin Apishaegam Achsaaramaay Pertravar Avarutaiya Makimaiyil Makizhnthu Paatuvaar (2) Aegan Yesu Siluvaiyil Thaegam Araiyak Kotutthavar Paatuthunbam Neengki Avaril Paati Makizhuvaar (2) Kiristhuvudan Aalukai Seyya Kirupaip Pertra Suttharkal Kireedam Sootum Naeram Enna Kirupaanandhamae (2) Poovulakil Oruvaraalum Paadakkootaa Paattathu Meetkappattor Maatthiram Paatum Meetpin Keedhamae (2)