பாடல் #38360
கதிரவன் ஒளி வீசுது
🔤 Kathiravan Oli Veesuthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கதிரவன் ஒளி வீசுது கர்த்தரை துதிசெய்ய காலையில் எழுந்திடுவீர் தாரகை ஒளி அங்கே தரணியை விழிக்க ஏராள இயற்கைகள் இயேசுவை துதிக்க கொக்கரக்கோவென்று கூவியே சேவல் குருவை வணங்கென்று கூறுது சேவல் சென்னியில் அஞ்சலி கூப்பி மலர்ந்து செந்தாமரை அதோ சேவிக்கிறது பார் கடல்நீர் மலைபோல் குவிந்தெழுந்தங்கே அலையாய் அல்லேலூயா பாடி துதிக்க வாடையும் தென்றலும் வானில் எழும்பி வாழ்க வாழ்கவென்று வணங்கி துதிக்க மாடபுறா கூட்டில் மகிழ்ந்தும்மை பாட மயிலினம் தோகை விரித்துமே ஆட கூ கூ வென்று குயில் கூவி துதிக்க குரு இயேசு திருமுகம் ஒளியாய் உதிக்க காலைத்தேடுவோர் கண்டடைவார் என்றும் கண்விழித்து ஜெபம் செய்யும்படி சொன்னார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kathiravan Oli Veesuthu Karttharai Thuthiseyya Kaalaiyil Ezhunthituveer Thaarakai Oli Angkae Tharaniyai Vizhikka Aeraala Iyarkaigal Yesuvai Thuthikka Kokkarakkovenru Kooviyae Saeval Kuruvai Vanangkenru Kooruthu Saeval Senniyil Anjjali Kooppi Malarnthu Senthaamarai Atho Saevikkirathu Paar Katalneer Malaipol Kuvinthezhundhangkae Alaiyaay Allaelooyaa Paati Thuthikka Vaataiyum Thendralum Vaanil Ezhumpi Vaazhka Vaazhkavenru Vanangki Thuthikka Maadapuraa Koottil Makizhnthummai Paada Mayilinam Thokai Viritthumae Aada Koo Koo Venru Kuyil Koovi Thuthikka Kuru Yesu Thirumugam Oliyaay Uthikka Kaalaitthaetuvor Kandataivaar Enrum Kanvizhitthu Jebam Seyyumbati Sonnaar