பாடல் #38356
துதித்தெழும்பிடுவீர்
🔤 Thuthitthezhumpituveer
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்தெழும்பிடுவீர் துதித்தெழும்பிடுவீர் அதிபனாம் இயேசுவின் பின் அணி வகுத்திடுவீர் அந்தகார லோகாதிபதி வானமண்டல பொல்லாதாவி போராட்டம் போராட்டம் உண்டானதால் இயேசுவின் நாமமே வல்லமை நாமம் அகிலத்தை ஜெயித்திடும் அல்லேலூயா நாமம் வாசல் நிலைகளில் வல்ல இரத்தம் கண்டால் சங்காரன் நுழைவானோ சத்தியத்தில் நின்றால் சகலமும் மாயை என்றறிந்ததை அழித்து சர்வாயுத வர்க்கத்தை சந்தோஷமாய் தரித்து சத்தியம் என்னும் கச்சையை அரையில் அணிந்து சாத்தானை ஜெயித்திட வீரமுடன் துணிந்து நீதியின் மார்க்கவசம் தரித்திடுவோமே நீதமன சாட்சியுடன் போர் புரிவோமே பொல்லாங்கன் எய்யும் அக்னியாஸ்திரங்களை அழிக்க பொற்பரன் விசுவாசக் கேடகத்தை பிடிக்க இரட்சண்ய மென்னும் தலைசீராவை அணிந்து தேவ வசன பட்டயத்தை ஆவியில் எடுத்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthezhumpituveer Thuthitthezhumpituveer Athibanaam Yesuvin Pin Ani Vakutthituveer Andhakaara Lokaathibathi Vaanamandala Pollaathaavi Poraattam Poraattam Untaanathaal Yesuvin Naamamae Vallamai Naamam Akilatthai Jeyitthitum Allaelooyaa Naamam Vaasal Nilaigalil Valla Rattham Kantaal Sangkaaran Nuzhaivaano Satthiyatthil Ninraal Sakalamum Maayai Endrarindhathai Azhitthu Sarvaayudha Varkkatthai Santhoshamaay Tharitthu Satthiyam Ennum Kachsaiyai Araiyil Aninthu Saatthaanai Jeyitthida Veeramudan Thuninthu Neethiyin Maarkkavasam Tharitthituvomae Needhamana Saatsiyudan Por Purivomae Pollaanggan Eyyum Akniyaasthiranggalai Azhikka Porparan Visuvaasak Kaedakatthai Pitikka Iratsanya Mennum Thalaiseeraavai Aninthu Thaeva Vasana Pattayatthai Aaviyil Etutthu