பாடல் #38355
கனியே கர்த்தர் விரும்பும்
🔤 Kaniyae Kartthar Virumpum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியே காணவே அன்பால் உன்னை தேடி வாராரே பூத்து மலரும் பூவல்ல பூவையர் விரும்பும் பூவல்ல மாந்தர் விரும்பும் பூவல்ல மகிமை இயேசு விரும்பும் அன்பு ஜதி விலகிடும் தோஷமல்ல அது சாத்தானால் வரும் தோஷமல்ல மக்களால் உண்டாகும் தோஷமல்ல அது மகிபன் விரும்பும் சந்தோஷம் சாத்திரம் காட்டும் தானமல்ல அது சத்திரம் கட்டிடும் தானமல்ல மாந்தர்கள் செய்திடும் தானமல்ல நம் மகிபர் விரும்பும் சமாதானம். புத்தகம் எழுதும் மையல்ல பூவையர் தீட்டிடும் மையல்ல மாந்தரை மயக்கும் மையல்ல மா கோபத்தில் காட்டிடும் பொறுமை இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல ஏழைக்கு இரங்கும் இரக்கமல்ல பெருமையில் காட்டும் இரக்கமல்ல நம் பிரியர் விரும்பும் தயவு நாவலர் பழக்கும் குணமல்ல நல்லோராய் நடக்கும் குணமல்ல சன்மார்க்கம் என்ற குணமல்ல சத்தியத்தில் நிற்கும் நற்குணம் பூக்களில் உண்டாகும் வாசமல்ல புது சேர்க்கையில் உண்டாகும் வாசமல்ல பன்னீரால் உண்டாகும் வாசமல்ல பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம் சாவில் விளங்கும் சாந்தமல்ல சத்தத்தை அடக்கும் சாந்தமல்ல சாந்த சொரூபி இயேசு நுகத்தில் சாய்ந்து சுமக்கும் சாந்தம் அமர்ந்திருப்பதடக்கமல்ல அலகை வெறுப்பதடக்கமல்ல உலக இச்சைக்கு ஓடி விலகி உன்னதரை சேரும் இச்சை அடக்கம் ஏமாற்றம் என்று இலைகளோடு இயேசு தேடும் கனி இல்லை அந்தோ சாபம் இறங்குது அத்தி மரம் பட்டு போகுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaniyae Kartthar Virumpum Mathurakkaniyae Kaanavae Anpaal Unnai Thaeti Vaaraarae Pootthu Malarum Poovalla Poovaiyar Virumpum Poovalla Maandhar Virumpum Poovalla Makimai Yesu Virumpum Anpu Jathi Vilakitum Thoshamalla Athu Saatthaanaal Varum Thoshamalla Makkalaal Untaakum Thoshamalla Athu Makiban Virumpum Santhosham Saatthiram Kaattum Thaanamalla Athu Satthiram Kattitum Thaanamalla Maandharkal Seythitum Thaanamalla Nam Makibar Virumpum Samaathaanam. Putthakam Ezhuthum Maiyalla Poovaiyar Theettitum Maiyalla Maandharai Mayakkum Maiyalla Maa Kobatthil Kaattitum Porumai Ittharaiyor Kaattum Irakkamalla Aezhaikku Irangkum Irakkamalla Perumaiyil Kaattum Irakkamalla Nam Piriyar Virumpum Thayavu Naavalar Pazhakkum Kunamalla Nalloraay Natakkum Kunamalla Sanmaarkkam Endra Kunamalla Satthiyatthil Nirkum Narkunam Pookkalil Untaakum Vaasamalla Puthu Saerkkaiyil Untaakum Vaasamalla Panneeraal Untaakum Vaasamalla Paran Yesuvil Vaikkum Visuvaasam Saavil Vilangkum Saandhamalla Satthatthai Adakkum Saandhamalla Saandha Soroopi Yesu Nugatthil Saaynthu Sumakkum Saandham Amarnthiruppathatakkamalla Alakai Veruppathatakkamalla Ulaka Ichsaikku Oti Vilaki Unnatharai Saerum Ichsai Adakkam Aemaartram Enru Ilaigalotu Yesu Thaetum Kani Illai Antho Saabam Irangkuthu Atthi Maram Pattu Pokuthu