பாடல் #38352
ஆயத்தமாவோமே அன்பால்
🔤 Aayatthamaavomae Anpaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயத்தமாவோமே அன்பால் - நாம் ஆண்டவரின் சேவை செய்ய காயத்தையும் இந்த லோகத்தையும் நாம் மாயை என்று வெறுத்து மாயையாம் லோகத்தைக் கவர்ந்து அந்தோ மாளுதே மா ஜனம் உவந்து ஏராளமாய் விரிவான பாதையில் போகிறார் நரகத்திற்கு - மாளவே போகிறார் ஹநரகத்திற்கு உண்மையுள்ளவரே அழைத்தார் - நாம் ஊழியம் செய்ய பெலன் அளித்தார். உத்தம பிரதிஷ்டை பாதையில் சென்று உன்னதர் சித்தம் செய்வோம் - மண்ணில் ஊழியம் நித்தம் செய்வோம் நிருபங்களாயிருப்போமே - மங்கா எரிபந்தமாய் எரிவோமே இருளின் மக்கள் மா வெளிச்சத்தைக் காண எரிந்து பிரகாசிப்போமே மண்ணில் எரிந்து பிரகாசிப்போமே கொஞ்ச காலம் என்றறிந்தான் - சாத்தான் கோபத்தால் சீறி இறங்கினான் ஆபத்து என்று அறை கூவி சாற்றி ஆத்துமாதாயம் செய்வோம் - நின்று சாத்தானை ஜெயித்திடுவோம் ஆத்துமாதாயம் செய்யாமல் - அவர் முன் நிற்க முடியாதன்னாளில் தன்னை வெறுத்து சிலுவை சுமந்து அன்னவர் சீஷராவோம் - வாரும் சொன்னவரை சந்திப்போம் மங்கா சுவிசேஷம் சுமந்து - அந்தோ மண்ணிலெங்கும் சுற்றி திரிந்த - பாதம் மலையின்மேல் வைத்து அழகு பார்க்கிறார் என்ன இதாச்சரியம் ஆஹா என்ன இதாச்சரியம் ஊழியம் செய்வோரின் பாக்கியம் - பிதா கனம் பண்ணுவதென்ன சிலாக்கியம் ஊழியம் செய்வோர்க்கும் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமை அந்நாளிலே குமாரராய் சம்பத்தை சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayatthamaavomae Anpaal - Naam Aandavarin Saevai Seyya Kaayatthaiyum Indha Logatthaiyum Naam Maayai Enru Verutthu Maayaiyaam Logatthaik Kavarnthu Antho Maaluthae Maa Janam Uvanthu Aeraalamaay Virivaana Paathaiyil Pokiraar Narakatthirku - Maalavae Pokiraar Hanarakatthirku Unmaiyullavarae Azhaitthaar - Naam Oozhiyam Seyya Pelan Alitthaar. Utthama Pirathishtai Paathaiyil Senru Unnathar Sittham Seyvom - Mannil Oozhiyam Nittham Seyvom Nirubanggalaayiruppomae - Mangkaa Eribandhamaay Erivomae Irulin Makkal Maa Velicchatthaik Kaana Erinthu Pirakaasippomae Mannil Erinthu Pirakaasippomae Konjja Kaalam Endrarinthaan - Saatthaan Kobatthaal Seeri Irangkinaan Aabatthu Enru Arai Koovi Saarri Aatthumaathaayam Seyvom - Ninru Saatthaanai Jeyitthituvom Aatthumaathaayam Seyyaamal - Avar Mun Nirka Mutiyaadhannaalil Thannai Verutthu Siluvai Sumanthu Annavar Seesharaavom - Vaarum Sonnavarai Santhippom Mangkaa Suvisaesham Sumanthu - Antho Mannilengkum Surri Thirindha - Paadham Malaiyinmael Vaitthu Azhaku Paarkkiraar Enna Ithaacchariyam Aahaa Enna Ithaacchariyam Oozhiyam Seyvorin Paakkiyam - Pithaa Kanam Pannuvathenna Silaakkiyam Oozhiyam Seyvorkkum Seyyaathorkkum Ulla Vaerrumai Annaalilae Kumaararaay Sambatthai Saertthituvaar