பாடல் #3835
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும்
🔤 Varutthappattu Paaram Sumakkum
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே வந்திடு என் இயேசு உன்னை அழைக்கின்றார் மனிதன் உன்னைக் கைவிடுவான் - இயேசு கைவிடார் மனிதன் மனம் மாறிடுவான் - இயேசு மாறிடார் வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே வாழ்கின்ற நாட்களெல்லாம் வீணாக கழித்துவிட்டாய் வருத்தங்கள் வேதனைகள் எல்லாம் தாங்கிவிட்டாய் வேதனையில் வாழ்ந்தது போதும் சோதனையை சகித்தது போதும் வாழவைக்கும் தேவன் உன்னை அழைக்கின்றார் வந்துவிடு இயேசு உன்னை நேசிக்கிறார் மாடி மனை வீடு கட்டி வாழ்ந்து பார்த்துவிட்டாய் மனசுக்கு நிம்மதியைத் தேடி அலைந்து விட்டாய் கூடுவிட்டு ஆவிபோனால் கூட ஒன்றும் வருவதுமில்லை சேர்ந்த வைத்த பொன்னும் பொருளும் - உன்னோடு புதைப்பதுமில்லை காதறுந்த ஊசியும் கூட வருவதில்லை கடைசிவரை இயேசுவைத் தவிர யாருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varutthappattu Paaram Sumakkum Nanpanae Vanthitu En Yesu Unnai Azhaikkinraar Manidhan Unnaik Kaivituvaan - Yesu Kaivitaar Manidhan Manam Maarituvaan - Yesu Maaritaar Varutthappattu Paaram Sumakkum Nanpanae Vaazhkindra Naatkalellaam Veenaaga Kazhitthuvittaay Varutthanggal Vaedhanaigal Ellaam Thaangkivittaay Vaedhanaiyil Vaazhndhathu Pothum Sodhanaiyai Sakitthathu Pothum Vaazhavaikkum Devan Unnai Azhaikkinraar Vanthuvitu Yesu Unnai Naesikkiraar Maati Manai Veetu Katti Vaazhnthu Paartthuvittaay Manasukku Nimmathiyaith Thaeti Alainthu Vittaay Kootuvittu Aaviponaal Kooda Onrum Varuvathumillai Saerndha Vaittha Ponnum Porulum - Unnotu Puthaippathumillai Kaadharundha Oosiyum Kooda Varuvathillai Kataisivarai Yesuvaith Thavira Yaarumillai