பாடல் #38342
ஏழை மனு உருவே என்னை
🔤 Aezhai Manu Uruvae Ennai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை மனு உருவே என்னை மீட்க வந்த குருவே கானக இரவே கரம்பிடியும் சுகம்பெறவே கண்ணீரினாலே உம் கால்களைக் கழுவி தலை மயிராலே துடைத்திட்ட மாதுபோல் பாவபார கண்ணீரை உம் பாதத்திலே ஊற்றி தேவ ஜீவ கீதம்பாட தேடி கண்டழைத்தீர் எண்ணங்கள் எத்தனை உள்ளத்தின் சிந்தனை மன்னித்தீர் ஐயா என்னையும் மெய்யாய் மன்னா உம் துன்பத்தில் மறுதலித்தானையா அன்னானைக் கண்ட கண்கள் என்னை காணுதையா காடுமலை கடந்தோம் மேடுபள்ளம் நடந்தோம் கபடமுள்ள நண்பரால் கலக்கங்கள் அடைந்தோம் காரிருள் மூடி பாதை அறிந்திடாமல் திகைத்தோம் பேரிருள் நீங்க பெரும் வெளிச்சம் கண்டுமகிழ்ந்தோம் மேன்மையின் லாபங்களை நஷ்டமென்றெண்ணி குப்பை என்றெண்ணி குருசிலே சாய்ந்தேன் குருநீர் காட்டும் பாதை பாடி பாடி நடப்பேன் கிருபை கிருபை போதும் என்று உம்மில் நிலைப்பேன் தாழ்விலே நினைத்தீர் தேவையை அளித்தீர் தேவதிரு புதிய சேவைக்கு அழைத்திர் சாவு நோவு வரும் வேளை என்னில் நிலைத்தீர் மேவும் மேலான கீதம் பாட பெலன் அளித்தீர் பாத்திரம் நிரம்பி வழிந்திடும் ஆவியில் பாய்ந்ததில் நீச்சல் ஆழம் பரவசமானோம் பெருவெள்ள இரைச்சல்போல பேரானந்தம் பொங்க திருவருளானந்தமாய் தேவஞானம் தங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Manu Uruvae Ennai Meetka Vandha Kuruvae Kaanaka Iravae Karampitiyum Sugamperavae Kanneerinaalae Um Kaalkalaik Kazhuvi Thalai Mayiraalae Thutaitthitta Maathupol Paavapaara Kanneerai Um Paadhatthilae Oorri Thaeva Jeeva Keedhampaada Thaeti Kandazhaittheer Ennanggal Etthanai Ullatthin Sindhanai Mannittheer Aiyaa Ennaiyum Meyyaay Mannaa Um Thunbatthil Marudhalitthaanaiyaa Annaanaik Kanda Kankal Ennai Kaanuthaiyaa Kaatumalai Katanthom Maetuballam Natanthom Kapatamulla Nanparaal Kalakkanggal Atainthom Kaarirul Mooti Paathai Arinthitaamal Thikaitthom Paerirul Neengga Perum Veliccham Kantumakizhnthom Maenmaiyin Laabanggalai Nashtamenrenni Kuppai Enrenni Kurusilae Saaynthaen Kuruneer Kaattum Paathai Paati Paati Natappaen Kirupai Kirupai Pothum Enru Ummil Nilaippaen Thaazhvilae Ninaittheer Thaevaiyai Alittheer Thaevathiru Puthiya Saevaikku Azhaitthir Saavu Novu Varum Vaelai Ennil Nilaittheer Maevum Maelaana Keedham Paada Pelan Alittheer Paatthiram Nirampi Vazhinthitum Aaviyil Paayndhathil Neecchal Aazham Paravasamaanom Peruvella Iraicchalpola Paeraanandham Pongga Thiruvarulaanandhamaay Devanjaanam Thangga