பாடல் #38336
இயேசென்று பெயரிடுங்கள்
🔤 Yesenru Peyaritunggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர் உன்னத ஆவி உலகினிலிறங்கி கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார் விண்ணை வெறுத்த இம்மானுவேலன் தன்னையே தாழ்த்தினோராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார் மேன்மை அனைத்தும் நஷ்டம் என்றெண்ணி மேலான நாமம் பெற்றார் - மேகத்தில் தூதர் மேய்ப்பரோடார்ப்பரித்தார். சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின் இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் இயேசுவை தரித்துக் கொள்வோம். நோய்பிணி பேய்சிறையாவும் அழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம். அவர் நாமத்திலண வாய்திறந்தார்ப்பரிப்போம் வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் முடங்குமே முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesenru Peyaritunggal Aenenil Paavam Neekki Iratsippavar Avar Unnatha Aavi Ulakinilirangki Kanniyaam Mariyidamaay Nizhalida Kartthanum Avatharitthaar Vinnai Veruttha Immaanuvaelan Thannaiyae Thaazhtthinoraay Thayaabaran Mannilae Avatharitthaar Maenmai Anaitthum Nashtam Enrenni Maelaana Naamam Perraar - Maegatthil Thoodhar Maeypparotaarpparitthaar. Saandham Manatthaazhmai Ilangkitum Yesuvin Inba Nugam Sumappom Jeeviyatthil Yesuvai Tharitthuk Kolvom. Noypini Paeysiraiyaavum Azhikkum Saaynthilaippaarituvom. Avar Naamatthilana Vaaythiranthaarpparippom Vanangkuvaar Yaavarum Vaanilum Poovilum Mudangkumae Muzhangkaal Yaavum Yesuvin Munnaal Natungkum Naanilam Muzhuthum