பாடல் #3833
வரவேணும் பரனாவியே
🔤 Varavaenum Paranaaviyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரவேணும் பரனாவியே, இறங்குஞ் சுடராய் மேவியே. மருளாம் பாவம் மருவிய எனக்கு வானாக்கினியால் ஞான தீட்சை தர, - வர 1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும் வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே; பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன், எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம், - வர 2.என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும் எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்; என்றன் செயலால் யாதொன்றும் முடியா தின்றே வானாக் கினி வரவேணும், - வர 3.குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும், தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்; படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல் அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய, - வர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varavaenum Paranaaviyae, Irangkunj Sudaraay Maeviyae. Marulaam Paavam Maruviya Enakku Vaanaakkiniyaal Njaana Theetsai Thara, - Vara 1.palamaana Eppaavamum Paazhaakkum Maanoykalum Valiyakotum Rogamum Maamsasinthai Otumae; Palipeedatthil Ennaip Paliyaaga Vaitthaen, Eliyaavin Jebatthuk Kirangkiya Vannam, - Vara 2.endran Pavamyaavaiyum Erikkumvakai Thaetiyum Engkum Indha Logatthil Ettheeyumae Kaankilaen; Endran Seyalaal Yaathonrum Mutiyaa Thinrae Vaanaak Kini Varavaenum, - Vara 3.kutikol Endhappaavamum Atiyotae Tholaitthitum, Thatutthaatkollum Thoshamum Saambalaagach Seythitum; Patimisai Kaarrukkup Paranthotum Saambalpol Atiyaen Aesuvuk Kanuthinambani Seyya, - Vara