பாடல் #38322
என்றென்றும் மாறிடா இயேசுவின்
🔤 Enrenrum Maaritaa Yesuvin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றும் மாறிடா இயேசுவின் ஐக்கியம் இன்றும் விளங்கிட ஏகமாய் போற்றுவோம் கர்த்தரின் அன்பதோ கல்வாரி மேட்டிலே இரத்தத்தைச் சிந்தி நம்மைசுத்தமாக்கி மீட்டதால் அநியாயத்தை சொல்ல ஆண்டவரின் முன்னே அபயமிட்ட ஆபேலின் இரத்தமல்ல இது கோபம் இல்லாமல் உன் மாபாவம் தீர்த்திட கூறி பிதாவின் முன்னே ஏறிநின்ற இரத்தமே மன்னாவை போலல்ல மகிமையின் அப்பமே மாதேவன் இயேசுனக்காய் பகிர்ந்த சரீரமே என்றும் ஜீவித்திட இயேசுவில் நிலைத்திட இயேசுவின் அன்பை என்றும் நினைத்து அருந்திட வானத்திறங்கி வந்த ஜீவ அப்பம் இது ஞானக் கன்மலை ஊற்றின் ஜீவ ரத்தமிது மைந்தனின் மாமிசமும் சிந்தன இரத்தமும் அருந்தி நித்திய ஜீவன் அடைந்திட சேருவோம் பாவத்தைக் கூறுவோம் பந்தியில் சேருவோம் தேவத்திருக்குமாரன் அன்பிலே சாருவோம் உன்னத ஆவியால் உள்ளத்தை சோதித்து கள்ளமில்லாமல் கர்த்தர் பந்தியிலே சேருவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenrum Maaritaa Yesuvin Aikkiyam Inrum Vilangkida Aegamaay Porruvom Karttharin Anbatho Kalvaari Maettilae Ratthatthaich Sinthi Nammaisutthamaakki Meettathaal Aniyaayatthai Solla Aandavarin Munnae Abayamitta Aapaelin Ratthamalla Ithu Kobam Illaamal Un Maapaavam Theertthida Koori Pithaavin Munnae Aerinindra Ratthamae Mannaavai Polalla Makimaiyin Appamae Maadevan Yesunakkaay Pakirndha Sareeramae Enrum Jeevitthida Yesuvil Nilaitthida Yesuvin Anpai Enrum Ninaitthu Arunthida Vaanatthirangki Vandha Jeeva Appam Ithu Njaanak Kanmalai Oorrin Jeeva Ratthamithu Maindhanin Maamisamum Sindhana Ratthamum Arunthi Nitthiya Jeevan Atainthida Saeruvom Paavatthaik Kooruvom Panthiyil Saeruvom Thaevatthirukkumaaran Anpilae Saaruvom Unnatha Aaviyaal Ullatthai Sothitthu Kallamillaamal Kartthar Panthiyilae Saeruvom