பாடல் #38321
பாக்கிய வாழ்விது பார்
🔤 Paakkiya Vaazhvithu Paar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாக்கிய வாழ்விது பார் பரன் இயேசுவோடே வந்து சேர் பரனை உடையவர் பாக்கியவான்கள் பரனிலிருந்து பரலோகத்தை ருசிப்பார் துன்பம் துக்கம் தொல்லை தொடர்ந்து வந்தாலும் தூயன் இயேசுவை நோக்கி துதித்திடுவோமே முன்வைத்த காலை பின் வையாமல் போர் முனையில் நாம் புகுந்திடுவோமே அசையாத இராஜ்ஜியம் அடைந்திட நாமே ஆண்டவரில் களி கூர்ந்திடுவோமே பார்வோன் முன்னே மோசேயோடே பக்தர்களின் சிறைச்சாலையினூடே எரியும் அக்கினியில் பக்தர்களோடே சீறும் சிங்கக்கெபியில் தானியேலோடே இருந்து விடுவித்தவர் இருப்பதால்கூட என்ன பயம் நமக்கு ஏசுவைப்பாட கல்லை அனைத்திருந்த கானக வழியில் கர்த்தரின் சமூகத்தை கண்டானந்தம் கொண்டான் வானாந்திரத்தில் வகுத்த கூடாரத்தில் வல்ல மகிமை வந்திறங்கினதைக் கண்டோம் இந்த ஜெப நேரத்தில் இறங்கியிருப்பதினால் ஏதும் பயமின்றி நாம் அவரிலிருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paakkiya Vaazhvithu Paar Paran Yesuvotae Vanthu Saer Paranai Utaiyavar Paakkiyavaankal Paranilirunthu Paralogatthai Rusippaar Thunbam Thukkam Thollai Thodarnthu Vanthaalum Thooyan Yesuvai Nokki Thuthitthituvomae Munvaittha Kaalai Pin Vaiyaamal Por Munaiyil Naam Pukunthituvomae Asaiyaadha Iraajjiyam Atainthida Naamae Aandavaril Kali Koornthituvomae Paarvon Munnae Mosaeyotae Paktharkalin Siraichsaalaiyinootae Eriyum Akkiniyil Paktharkalotae Seerum Singgakkepiyil Thaaniyaelotae Irunthu Vituvitthavar Iruppathaalkooda Enna Payam Namakku Aesuvaippaada Kallai Anaitthirundha Kaanaka Vazhiyil Karttharin Samoogatthai Kantaanandham Kontaan Vaanaanthiratthil Vakuttha Kootaaratthil Valla Makimai Vanthirangkinathaik Kantom Indha Jeba Naeratthil Irangkiyiruppathinaal Aethum Payaminri Naam Avariliruppathaal