பாடல் #38316
நாம் வாழ்வது பேரின்பசபை
🔤 Naam Vaazhvathu Paerinbasapai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் வாழ்வது பேரின்பசபை நாம் பாடுவது பேரின்பக்கீதம நாம் ஆவியினால் நிறைந்து ஆண்டவரின் பாதை சென்று கூறுவது சத்திய சாட்சி ஏன் இந்த மேன்மை நமக்கு நம் இயேசுவில் சொந்தமானது அன்பரின் சாயலை நம்மிலே ஈந்ததால் ஆனந்தம் பொங்கி அவர்துதி பாடுவோம் பொன்னாலான வீதிகளுண்டு அதை சொல்லால் விவரிக்கவொண்ணாது கண்ணான நம் இயேசுவால் காணும்பாக்கியம் பெற்றதால் பொன்னான இயேசுவை நாம்போற்றி பாடுவோம் இருள் இல்லா இன்பவிடே தெய்வ அருள் பெற்ற அன்பர்வீடே ஒளி அங்கு இயேசுவே அளவில்லாவீசவே களித்தவரில் தினம் துதி பாடுவோம் பலரால் வரும் பாடு துன்பங்கள் சிலக் காடுமேடுகள் தாண்டியே பக்தராக கூடியே அக்கரையை நாடியே இத்தரையில் இயேசுவின் சாட்சி கூறுவோம். மாயாபுரி சந்தையின் மக்கள் அநியாயமாக தூற்றிக் கூறட்டும் நியாயத்தின் பாதையில் தூயரின் வார்த்தைகள் நேயமாய்க்கூறி நாயனோடு வாழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Vaazhvathu Paerinbasapai Naam Paatuvathu Paerinbakkeedhama Naam Aaviyinaal Nirainthu Aandavarin Paathai Senru Kooruvathu Satthiya Saatsi Aen Indha Maenmai Namakku Nam Yesuvil Sondhamaanathu Anbarin Saayalai Nammilae Eendhathaal Aanandham Pongki Avarthuthi Paatuvom Ponnaalaana Veethigaluntu Athai Sollaal Vivarikkavonnaathu Kannaana Nam Yesuvaal Kaanumpaakkiyam Pertrathaal Ponnaana Yesuvai Naamporri Paatuvom Irul Illaa Inbavitae Theyva Arul Pertra Anbarveetae Oli Angku Yesuvae Alavillaaveesavae Kalitthavaril Thinam Thuthi Paatuvom Palaraal Varum Paatu Thunbanggal Silak Kaatumaetugal Thaantiyae Paktharaaga Kootiyae Akkaraiyai Naatiyae Ittharaiyil Yesuvin Saatsi Kooruvom. Maayaapuri Santhaiyin Makkal Aniyaayamaaga Thoorrik Koorattum Niyaayatthin Paathaiyil Thooyarin Vaartthaigal Naeyamaaykkoori Naayanotu Vaazhvom