பாடல் #38313
சருவாதிகார தேவே நின்கிருபை
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
சருவாதிகார தேவே நின்கிருபை தா பிதாவே சுயவிருதயத்தின் யோசனை ஆசைகள் கேடுற தொடர்ந்து வந்தேன் - நின் தூய தொழு மறைக்கெதிர் புரிந்தேன் மக தலவூரின் மரி பாவம் பொறுத்தாய் வஞ்சகர் இடர் அறுத்தாய் - உலகின் வாதை பிணி தீர்த்தாய் கையுமெய்யுமாய் பாவத்தில் கண்ட தையலுக்காக்கினைத் தவிர்த்தாய் - இடம் கள்ளனுக் கருகினில் கொடுத்தாய் வரும் திமிர்வாத வல்வினை தீர்த்தாய் அகமதாய் மறுதலித்த பேதுருவை அன்புண்டா எனக் கேட்டாய் அஞ்சியக் கானான் ஸ்திரிக்கிரங்கி அவள் மனுபடி செய்தாய் - ஜாதிபேய் அறவே ஒழியச் செய்தாய்