பாடல் #3831
வந்தே கடைக்கண்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
வந்தே கடைக்கண் பாருமேன், - சர்வேசுரனே, வந்தே கடைக்கண் பாருமேன். 1.வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி, எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. - வந்தே 2.கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே; வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! - வந்தே 3.எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ! கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க - வந்தே 4.எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல் எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! - வந்தே 5.மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்; ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். - வந்தே 6.எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்? அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. - வந்தே 7.வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத் தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. - வந்தே