பாடல் #38307
மகிமை சொரூபா மாவல்ல தேவா
🔤 Makimai Soroopaa Maavalla Thaevaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை சொரூபா மாவல்ல தேவா மன்னா வந்தாளுமே - நின் மகிமை ஜோதியை மைந்தர்கள் காண ஐங்காயத்தோடு வாருமே சக்தி இல்லை ஐயா சாம்பலும் தூசியும் முக்தி அடைய முழங்காலிலிருக்கோம் பக்தி வளர பரமனை அடைய பரிசுத்தாவியால் நிறைத்திடும் என்னையே என்ஆசை இயேசுவே உன் ஆசையாலே மண்ணாசை ஒழித்து பொன்னகர் சேர உருக்கத்தோடே உள்ளத்தை மாற்ற உன்னத ஆவியால் நிறைத்திடும் என்னையே ஏவையின் மக்களாய் பாவத்தில் அலைவோர் தேவையை அறிந்த தேவாவியே வா சாவை அழித்து சேவை புரிய சத்திய ஆவியால் நிறைத்திடும் என்னையே சதாகாலத்திலும் இருப்பேன் உன்னோடே சத்துரு வல்லமையை அழிப்பேன் என்றீரே சத்துரு கூட்டத்தின் சக்தியை அழிக்க சர்வாயுத வர்க்கத்தால் உடுத்திடும் என்னையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Soroopaa Maavalla Thaevaa Mannaa Vanthaalumae - Nin Makimai Jothiyai Maindharkal Kaana Aingkaayatthotu Vaarumae Sakthi Illai Aiyaa Saambalum Thoosiyum Mukthi Ataiya Muzhangkaalilirukkom Pakthi Valara Paramanai Ataiya Parisutthaaviyaal Niraitthitum Ennaiyae Enaasai Yesuvae Un Aasaiyaalae Mannaasai Ozhitthu Ponnakar Saera Urukkatthotae Ullatthai Maartra Unnatha Aaviyaal Niraitthitum Ennaiyae Aevaiyin Makkalaay Paavatthil Alaivor Thaevaiyai Arindha Thaevaaviyae Vaa Saavai Azhitthu Saevai Puriya Satthiya Aaviyaal Niraitthitum Ennaiyae Sathaakaalatthilum Iruppaen Unnotae Satthuru Vallamaiyai Azhippaen Enreerae Satthuru Koottatthin Sakthiyai Azhikka Sarvaayudha Varkkatthaal Ututthitum Ennaiyae