பாடல் #38306
இம்மானுவேலவரே என்றும் நம்மோடு
🔤 Immaanuvaelavarae Enrum Nammotu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலவரே - என்றும் நம்மோடு இருப்பவரே அன்பின் கரத்தால் அணைத்தெடுத்தென்றும் துன்பத்தை நீக்குவாரே அத்தனின் அண்டையில் இன்று ஓடி வா அவர் காட்டும் மாதிரி பின்பற்றிடவா அமலன் முழுகி ஸ்நானம் பெற்றாரே அவர் கரை ஏறுகையில் ஆவிபெற்றாரே பாவத்தை அறிக்கை செய்திட வேணும் பூரணமாய் அதை வெறுத்திட வேணும் இயேசுவோடே பாவம் மரித்திட வேணும் இன்புற்று அவரோடே உயிர்த்திடவேணும் தேவன் விளக்கிய வேத பிரமாணம் ஆதிசபை செய்த தெய்வ தீர்மானம் ஆவியின் ஜலத்தினால் பிறந்திட வேணும் தெய்வத்தின் நீதியை நிறைவேற்ற வேணும் உன்னதன் கட்டளை நன்மனதோடு உடன்படிக்கை செய்து கிருபையை நாடு தன்னையறிந்து மெய்விசுவாசத்தோடு தண்ணீரில் முழுகி தமையனை பாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelavarae - Enrum Nammotu Iruppavarae Anpin Karatthaal Anaitthetutthenrum Thunbatthai Neekkuvaarae Atthanin Antaiyil Inru Oti Vaa Avar Kaattum Maathiri Pinbarridavaa Amalan Muzhuki Snaanam Perraarae Avar Karai Aerukaiyil Aaviperraarae Paavatthai Arikkai Seythida Vaenum Pooranamaay Athai Verutthida Vaenum Yesuvotae Paavam Maritthida Vaenum Inpurru Avarotae Uyirtthidavaenum Devan Vilakkiya Vaedha Piramaanam Aathisapai Seytha Theyva Theermaanam Aaviyin Jalatthinaal Piranthida Vaenum Theyvatthin Neethiyai Niraivaertra Vaenum Unnathan Kattalai Nanmanathotu Udanbatikkai Seythu Kirupaiyai Naatu Thannaiyarinthu Meyvisuvaasatthotu Thanneeril Muzhuki Thamaiyanai Paatu