பாடல் #383
ஆண்டவர் வரும் நேரம் நாளும்
🔤 Aandavar Varum Naeram Naalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆண்டவர் வரும் நேரம் நாளும் அறியோம் காலம் சமீபம் அடையாளம் காண்கிறோம் மீண்டும் வாறார் பார் உரைக்கும் வாக்குத்தத்தம் காலம் நாம் அறியோம். வருவார் .... காத்தே நாம் தயாராவோம் வருவார் ... அல்லேலூயா அல்லேலூயா! மேத்தில் வருவார் பிதா மகிமையோடு நேரம் நாம் அறியோம். 2. ரட்சிப்பு தேடும் ஞானி காணும் ஒளியும் கர்த்தர் பேசின ஆகம சத்தியமும் தீர்க்கருரைகள் எல்லாம் மீண்டும் வாறாரே காலம் நாம் அறியோம். 3. தீபங்கள் தூண்டி ஜெபம் விழித்தே செய்வோம் நற்பணியாற்றி பாடி அகமகிழ்வோம் ஆண்டவர் வாறார் ஜீவ முத்தூது சொல்வோம் காலம் நாம் அறியோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aandavar Varum Naeram Naalum Ariyom Kaalam Sameebam Ataiyaalam Kaankirom Meentum Vaaraar Paar Uraikkum Vaakkutthattham Kaalam Naam Ariyom. Varuvaar .... Kaatthae Naam Thayaaraavom Varuvaar ... Allaelooyaa Allaelooyaa! Maetthil Varuvaar Pithaa Makimaiyotu Naeram Naam Ariyom. 2. Ratsippu Thaetum Njaani Kaanum Oliyum Kartthar Paesina Aagama Satthiyamum Theerkkaruraigal Ellaam Meentum Vaaraarae Kaalam Naam Ariyom. 3. Theebanggal Thoonti Jebam Vizhitthae Seyvom Narpaniyaarri Paati Agamakizhvom Aandavar Vaaraar Jeeva Mutthoothu Solvom Kaalam Naam Ariyom.