பாடல் #38294
யாருக்குத் தான் தெரியும்
🔤 Yaarukkuth Thaan Theriyum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருக்குத் தான் தெரியும் அவர் மகிமை பாருலகோர் தொழும் பார்த்திபன் அருமை பாவத்தின் சம்பளம் மரணத்தை ஜெயிக்க இயேசுவினால் வரும் ஜீவனைக் கொடுக்க பாவத்தில் மாண்டவர் மீண்டுமே பிழைக்க சாபத்தை போக்கவர் செய்திட்ட கிரியை குஷ்டரோகிகளின் கூக்குரல் கேட்டார் கஷ்டப்படுவோர்க்கு காட்சி அளித்தார் பாவபடுக்கையை மாற்றி அமைத்தார் தேவ திருதொனிதேனாய் அளித்தார் மலைபிரசங்கத்தில் மாதேவன் தாமே விலையில்லா பொன்மொழி அளித்தவராமே காசினியோர் புகழ் காத்தவராமே இத்தரை மீதினிலே வித்தகனாமே மூவுலகோர் தொழும் தேவக்குமாரன் முள்முடி சூடியே மூன்றாணி மீதில் முடிந்தது என்றவர் ஜீவனை விட்டு மூன்றாம் நாள் ஜீவனோடெழுந்திட்ட தேவன் நாற்பது நாள்வரை நானிலமீதில் நம்பிடும் அன்பரை கண்டுகளித்து வானத்தின் மேகத்தில் ஏறியே சென்று திரும்ப வருவேனென்று மறைந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarukkuth Thaan Theriyum Avar Makimai Paarulakor Thozhum Paartthiban Arumai Paavatthin Sambalam Maranatthai Jeyikka Yesuvinaal Varum Jeevanaik Kotukka Paavatthil Maandavar Meentumae Pizhaikka Saabatthai Pokkavar Seythitta Kiriyai Kushtarokigalin Kookkural Kaettaar Kashtappatuvorkku Kaatsi Alitthaar Paavapatukkaiyai Maarri Amaitthaar Thaeva Thiruthonithaenaay Alitthaar Malaipirasanggatthil Maadevan Thaamae Vilaiyillaa Ponmozhi Alitthavaraamae Kaasiniyor Pugazh Kaatthavaraamae Ittharai Meethinilae Vitthakanaamae Moovulakor Thozhum Thaevakkumaaran Mulmuti Sootiyae Moonraani Meethil Mutindhathu Endravar Jeevanai Vittu Moonraam Naal Jeevanotezhunthitta Devan Naarpathu Naalvarai Naanilameethil Nampitum Anbarai Kantugalitthu Vaanatthin Maegatthil Aeriyae Senru Thirumba Varuvaenenru Marainthaar