பாடல் #38293
கைவிடப்பட்டேன் என்று நீ கலங்கி
🔤 Kaividappattaen Enru Nee Kalangki
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடப்பட்டேன் என்று நீ கலங்கி வாடாதே - மனமே ஆவியைக் கொடுத்த ஆண்டவன் ஜீவனோடெழுந்தார் என்றென்றும் துன்பங்கள் தொல்லைகளுன்னை சூழ்ந்து கொண்டாலும் மனமே என்றும் மாரா இயேசு அன்பு உன்னோடிருக்கையிலே உள்ளமே என்ன குறை உனக்கு இப்பூவில் எண்ணுக்கடங்கா வாக்குத்தத்தம் ஏகன் அளித்தாரே உனக்கு விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் அண்ணல் வாக்கெதுவும் மாறாது இன்னல் ஏன் உனக்கு இப்பூவில் சீறி விழுந்த சிங்கக்கெபியில் தானியேலுடனே - இருந்தார் மீறி எரிந்த தீயினிடையில் மூவருடனிருந்த தேவனார் கூட இருக்கையிலே இப்பூவில் கல்லடிகளால் சிதைந்த தேவானோடிருந்து ஒளியாய் திங்களை போல திகழ்ந்த மங்காத மணவாளன் இயேசு உன்னோடிருக்கையிலே - இப்பூவில் இல்லமே முழுக உன்மேலே வெள்ளம் போல் புரண்டு - வந்தாலும் எல்லோரும் உன்னை ஏகமாய் கைவிட்டாலும் நீ அல்லேலூயா பாடி மகிழ்ந்திடுவாய் - இப்பூவில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaividappattaen Enru Nee Kalangki Vaataathae - Manamae Aaviyaik Kotuttha Aandavan Jeevanotezhunthaar Enrenrum Thunbanggal Thollaigalunnai Soozhnthu Kontaalum Manamae Enrum Maaraa Yesu Anpu Unnotirukkaiyilae Ullamae Enna Kurai Unakku Ippoovil Ennukkatangkaa Vaakkutthattham Aegan Alitthaarae Unakku Vinnum Mannum Ozhinthaalum Annal Vaakkethuvum Maaraathu Innal Aen Unakku Ippoovil Seeri Vizhundha Singgakkepiyil Thaaniyaeludanae - Irunthaar Meeri Erindha Theeyinitaiyil Moovarudanirundha Devanaar Kooda Irukkaiyilae Ippoovil Kallatigalaal Sithaindha Thaevaanotirunthu Oliyaay Thinggalai Pola Thigazhndha Mangkaadha Manavaalan Yesu Unnotirukkaiyilae - Ippoovil Illamae Muzhuga Unmaelae Vellam Pol Purantu - Vanthaalum Ellorum Unnai Aegamaay Kaivittaalum Nee Allaelooyaa Paati Makizhnthituvaay - Ippoovil