பாடல் #38290
நித்திய மோட்சத்தின்
🔤 Nitthiya Motsatthin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய மோட்சத்தின் ஆனந்த வீடு சத்தியவான் சபைக் கூடிடும் நாடு கண்டிட கர்த்தரின் உதவியை நாடு தெரிந்திட திருமறையுடன் உறவாடு மகிமையின் நகருக்கு மதில் வச்சிர கல்லு மகிபனார் வாழ்ந்திடும் நகரமே பொன்னு பளிங்கு போல் துலங்கிடும் பரலோக விண்ணு பார்த்திட இயேசுவை மனதில் எண்ணு தேவனும் தேவாட்டுக் குட்டியுமாக தேவாலயமாய் துலங்கிடுவாரே தேவன் உலாவிடும் தெருவீதி எல்லாம் தெளிவுள்ள கலப்பில்லா பரிசுத்த பொன்னு சூரிய சந்திர ஒளிக்கிடையாது நீதியாய் ஜொலிப்பாரே சூரியன் இயேசு ஜோதி பிரகாசமாய் சுத்தர்கள் நின்று ஓதி வணங்குவார் ஒளியதைக் கண்டு கேடு கொடுந்துயர் கொடுமையின் தொல்லை பாடு வருத்தம் அந்நாட்டினிலில்லை பாவமும் சாபமும் ரோகமுமில்லை பாடு படாதவர் காண்பதுமில்லை துன்பத்தின் பாதையில் நடந்திட்ட கூட்டம் இன்பத்தின் மத்தியில் இயேசுவின் தேட்டம் கொண்டுமே பாடி மகிழ்திடும் கூட்டம் அன்புடன் அவர் புகழ் கூறிடும் பாட்டும் கற்புள்ள கன்னிகையாயுள்ள சுத்தர் கர்த்தரை மணந்திட்ட மகிமையின் சித்தர் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் கர்த்தரால் முத்திரை போட்டிட்ட சுத்தர் வச்சிரக்கல் இந்திர நீலம் சந்திர காந்தம் மரகதம் கோமேதகம் பதுமராகமும் சுவர்ணரத்தினம் நல்ல படிக பச்சையும் புஷ்பராகம் வைடூரியம் சுநீரம் சுகந்தியால் அஸ்திபாரம் பளிங்கு போல் தெளிவான ஜீவநதியாம் அதன் இரு கரைகளில் ஜீவ விருட்சம் பன்னிரு மாதமும் புது புது விதமாய் புசிப்புக்கு இனிமையாய் கொடுத்திடும் கனிகள் பன்னிரு வாசல்கள் மின்னி துலங்கும் மின்னலொளி போல பொன்னொளி வீசும் முத்துக்களின் ஒளி கதிர்களாய் வீசும் அத்தனின் அரண்மனை காணக்கண் கூசும் முற்பிதாக்களோடு அப்போஸ் தலரும் இரத்த சாட்சியாக மரித்த சுத்தரும் கல்வாரி நாயகன் கர்த்தருடனே அல்லேலுயாக் கீதம் பாடி மகிழும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Motsatthin Aanandha Veetu Satthiyavaan Sapaik Kootitum Naatu Kantida Karttharin Udhaviyai Naatu Therinthida Thirumaraiyudan Uravaatu Makimaiyin Nakarukku Mathil Vachsira Kallu Makibanaar Vaazhnthitum Nakaramae Ponnu Palingku Pol Thulangkitum Paraloga Vinnu Paartthida Yesuvai Manathil Ennu Devanum Thaevaattuk Kuttiyumaaga Thaevaalayamaay Thulangkituvaarae Devan Ulaavitum Theruveethi Ellaam Thelivulla Kalappillaa Parisuttha Ponnu Sooriya Santhira Olikkitaiyaathu Neethiyaay Jolippaarae Sooriyan Yesu Jothi Pirakaasamaay Suttharkal Ninru Othi Vanangkuvaar Oliyathaik Kantu Kaetu Kotunthuyar Kotumaiyin Thollai Paatu Varuttham Annaattinilillai Paavamum Saabamum Rogamumillai Paatu Pataadhavar Kaanpathumillai Thunbatthin Paathaiyil Natanthitta Koottam Inbatthin Matthiyil Yesuvin Thaettam Kontumae Paati Makizhthitum Koottam Anpudan Avar Pugazh Kooritum Paattum Karpulla Kannikaiyaayulla Sutthar Karttharai Mananthitta Makimaiyin Sitthar Latsatthu Naarpatthu Naalaayiram Paer Karttharaal Mutthirai Pottitta Sutthar Vachsirakkal Inthira Neelam Santhira Kaandham Marakatham Komaedhakam Pathumaraagamum Suvarnaratthinam Nalla Patiga Pachsaiyum Pushparaagam Vaitooriyam Suneeram Suganthiyaal Asthipaaram Palingku Pol Thelivaana Jeevanathiyaam Adhan Iru Karaigalil Jeeva Virutsam Panniru Maadhamum Puthu Puthu Vidhamaay Pusippukku Inimaiyaay Kotutthitum Kanigal Panniru Vaasalkal Minni Thulangkum Minnaloli Pola Ponnoli Veesum Mutthukkalin Oli Kathirkalaay Veesum Atthanin Aranmanai Kaanakkan Koosum Murpithaakkalotu Appos Thalarum Rattha Saatsiyaaga Marittha Suttharum Kalvaari Naayakan Karttharudanae Allaeluyaak Keedham Paati Makizhum