பாடல் #38287
ஆனந்தமே பரமானந்தமே
🔤 Aanandhamae Paramaanandhamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே பரமானந்தமே - எந்தன் ஆத்தும நேசரின் மெய் அன்பினால் அவரன்பின் பாதத்தை அனுதினமும் தேடி கிருபையின் பாதத்தில் பரிவுடன் கூடி ஆவியினால் நிறைந்தே கவி பாடி அவருக்கே செலுத்துவோம் துதிகோடி கிறிஸ்துவின் அன்பை அறியாமலே - நான் கிறிஸ்துவின் நடத்துதல் தெரியாமலே வானவர் வாக்குகள் அறிந்திடாமல் - நான் வழிவிலகி தூர போயிருந்தேன் - என்னை கிருபையின் கரத்தினால் திருப்பினாரே - அவர் கருணையின் கரங்களில் அணைத்தனரே எண்ணில்லா மீறுதல் என்னிடமிருக்க மன்னித்தாரே என்னை மாதயவாய் அன்னையை போலெனக்கன்பளித்தாரே - நான் என்னத்தை கொடுப்பேன் இயேசுவுக்காய் - மெய் நன்றியினால் உள்ளம் மகிழ்ந்திடுதே - நான் என்றுமே அவருக்காய் பிழைத்திடவே உலகம் மாமிசம் ஒன்று கூடி எந்தன் உவகையை மாற்றும் வேளையிலே கலக்கத்தினால் நான் கண்ணீர் விடும் வேளை கலங்காதே திகையாதே மகளே (மகனே) என்று - தன் ஆணிக்கடாவின கரங்களினால் - என் கண்ணீரை துடைத்தாரே அன்புகொண்டு உன்னை நான் அறிவேன் என் மகளே (மகனே) உன் பெலவீனத்தை நான் அறிந்திடுவேன் கள்ளனைஅறிந்த கர்த்தனேசு நான் தள்ளவே மாட்டேன் சோர்ந்திடாதே - நீ உள்ளளவும் அல்லேலூயா பாடி மகிழ்வாய் மகனே (மகளே) எனத் தேற்றினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae Paramaanandhamae - Endhan Aatthuma Naesarin Mey Anpinaal Avaranpin Paadhatthai Anuthinamum Thaeti Kirupaiyin Paadhatthil Parivudan Kooti Aaviyinaal Nirainthae Kavi Paati Avarukkae Selutthuvom Thuthikoti Kiristhuvin Anpai Ariyaamalae - Naan Kiristhuvin Natatthudhal Theriyaamalae Vaanavar Vaakkugal Arinthitaamal - Naan Vazhivilaki Thoora Poyirunthaen - Ennai Kirupaiyin Karatthinaal Thiruppinaarae - Avar Karunaiyin Karanggalil Anaitthanarae Ennillaa Meerudhal Ennidamirukka Mannitthaarae Ennai Maadhayavaay Annaiyai Polenakkanbalitthaarae - Naan Ennatthai Kotuppaen Yesuvukkaay - Mey Nanriyinaal Ullam Makizhnthituthae - Naan Enrumae Avarukkaay Pizhaitthidavae Ulakam Maamisam Onru Kooti Endhan Uvakaiyai Maarrum Vaelaiyilae Kalakkatthinaal Naan Kanneer Vitum Vaelai Kalangkaathae Thikaiyaathae Makalae (makanae) Enru - Than Aanikkataavina Karanggalinaal - En Kanneerai Thutaitthaarae Anpukontu Unnai Naan Arivaen En Makalae (makanae) Un Pelaveenatthai Naan Arinthituvaen Kallanaiarindha Kartthanaesu Naan Thallavae Maattaen Sornthitaathae - Nee Ullalavum Allaelooyaa Paati Makizhvaay Makanae (makalae) Enath Thaerrinaarae