பாடல் #38284
என்ன செய்வேன் இன்னிலத்தில்
🔤 Enna Seyvaen Innilatthil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன செய்வேன் இன்னிலத்தில் இரட்சகர்க்காய் மெய்ஞான திருதேவன் அஞ்ஞானிக்காய் தஞ்சம் தர தனதுயிர் கொடுத்தார் எண்ணில்லா பக்தர்கள் இத்தரையிலிருக்க என்னையும் நேசித்தார் என்னத்துக்கோ பாவியை மீட்க பராபரனே வேறே வழி ஏதும் தானில்லையோ தன்னையே தியாகமாய் கல்வாரியிலளித்து என்னையும் நேசித்தார் என்னத்துக்கோ கர்த்தாதி கர்த்தா கிறிஸ்தேசு நான் உன்னோடிருந்து வழி நடத்த கிருபை இரக்கங்களினால் முடி சூட்டி பிரியா திருப்பேன் என்று வாக்களித்தீர் என்னை பின்பற்றிடுவோன் செய்வதே தன் ஜீவனை வெறுத்து தாழ்த்தியே தன் சிலுவையை தன் கைகளில் ஏந்திக்கொண்டு என்னைப் பின் பற்றிவா என்கிறீரோ. நித்திய பிதாவே உந்தனுக்காய் சத்திய சாட்சியாய் நான் நிற்கவே நித்தம் என்வார்த்தையும் தியானமுமாயிருந்து கன்மலை கிறிஸ்துவை காட்டிடவோ இங்கே என் இன்பம் என் இயேசு தானே இன்னும் நான் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன் உம் சித்தம் என்னிலே ஆகிடவேணுமென்று ஒப்புவிப்பேன் அன்பர் கைகளிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Seyvaen Innilatthil Iratsakarkkaay Meynjaana Thirudevan Anjnjaanikkaay Thanjjam Thara Thanathuyir Kotutthaar Ennillaa Paktharkal Ittharaiyilirukka Ennaiyum Naesitthaar Ennatthukko Paaviyai Meetka Paraabaranae Vaerae Vazhi Aethum Thaanillaiyo Thannaiyae Thiyaagamaay Kalvaariyilalitthu Ennaiyum Naesitthaar Ennatthukko Kartthaathi Kartthaa Kiristhaesu Naan Unnotirunthu Vazhi Natattha Kirupai Irakkanggalinaal Muti Sootti Piriyaa Thiruppaen Enru Vaakkalittheer Ennai Pinbarrituvon Seyvathae Than Jeevanai Verutthu Thaazhtthiyae Than Siluvaiyai Than Kaigalil Aenthikkontu Ennaip Pin Parrivaa Enkireero. Nitthiya Pithaavae Undhanukkaay Satthiya Saatsiyaay Naan Nirkavae Nittham Envaartthaiyum Thiyaanamumaayirunthu Kanmalai Kiristhuvai Kaattidavo Ingkae En Inbam En Yesu Thaanae Innum Naan Onrukkum Anjjamaattaen Um Sittham Ennilae Aakidavaenumenru Oppuvippaen Anbar Kaigalilae