பாடல் #38283
வல்ல மணாளன் வானத்தின்
🔤 Valla Manaalan Vaanatthin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வல்ல மணாளன் வானத்தின் மேல் வந்திடும் வேளை நெருங்கிடுதே எக்காள சத்தம் தொனித்திடுமே இயேசுவின் தாசரை சேர்த்திடவே அற்புத கிரியைகள் நடைபெறுதே ஆண்டவர் வருகையை தெரிவிக்குதே தூங்கிடும் தாசரே எழுந்திடுவீர் தாங்கிடும் ஆவியில் ஜெபித்திருப்போம் 2. பஞ்சங்கள் கலகங்கள் பலவிதமாய் பாரினிலெங்கும் நடைபெறுதே கொலைகளும் கொள்ளையும் விதவிதமாய் குவலயமெங்கும் பெருகிடுதே 3. சகலமாம் ஜாதிக்கு சுவிசேஷமே அகிலம் எங்கும் தொனித்திடுதே அன்பராம் இயேசுவின் தாசருக்கே துன்பங்கள் எங்கும் மிகுந்திடுதே 4. அத்திமரம் அதோ துளிர் விடுதே வசந்தகாலமும் வந்திடுதே அத்தன் உன் வாசலண்டையில் நிற்கிறார் சத்தியமாய் உன்னை சந்தித்திடுவார் 5. காலையோ நண்பகல் மாலையிலோ கர்த்தன் வருகையை அறியாததால் நித்தமும் ஜெபத்தோடு விழித்திருந்து சத்திய பாதையில் நடந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Valla Manaalan Vaanatthin Mael Vanthitum Vaelai Nerungkituthae Ekkaala Sattham Thonitthitumae Yesuvin Thaasarai Saertthidavae Arpudha Kiriyaigal Nataiperuthae Aandavar Varukaiyai Therivikkuthae Thoongkitum Thaasarae Ezhunthituveer Thaangkitum Aaviyil Jepitthiruppom 2. Panjjanggal Kalakanggal Palavidhamaay Paarinilengkum Nataiperuthae Kolaigalum Kollaiyum Vidhavidhamaay Kuvalayamengkum Perukituthae 3. Sakalamaam Jaathikku Suvisaeshamae Akilam Engkum Thonitthituthae Anbaraam Yesuvin Thaasarukkae Thunbanggal Engkum Mikunthituthae 4. Atthimaram Atho Thulir Vituthae Vasandhakaalamum Vanthituthae Atthan Un Vaasalantaiyil Nirkiraar Satthiyamaay Unnai Santhitthituvaar 5. Kaalaiyo Nanpakal Maalaiyilo Kartthan Varukaiyai Ariyaadhathaal Nitthamum Jebatthotu Vizhitthirunthu Satthiya Paathaiyil Natanthituvom