பாடல் #38282
இன்ப இயேசு பாதமே
🔤 Inba Yesu Paadhamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப இயேசு பாதமே வந்து சேருமே துன்பம் நீங்குமே - இன்ப பாவ பாரமே தாங்கி இருப்போரே பரமன் இயேசுவின் பாதம் சேருமே பாவமதை நீக்கி இளைப்பாறுதலை தருவேன் என்கிறார் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என்னிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள் அப்போது உன் ஆத்துமா இளைப்பாறுதல் அடையும் என்கிறார் காணாமற் போன ஆட்டைத்தேடியே கல்வாரியில் தொங்கினார் இயேசு சிலுவையின் இரத்தம் உன்னை சீராக்கியே மோட்சம் சேர்க்குமே பேயை வென்றவர் உன் நோயை தீர்ப்பவர் தாயைப்போலவே கூவி அழைக்கிறார் சேயைப்போலவே தாவி அவர் பாதமதை பற்றி பிடிக்கவா வருகை காலமோ சமீபமாகுதே கிருபை காலமோ நம்மைத் தாங்குதே தேவ வசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகுதே அன்பினாலதோ சுவிசேஷம் அளிக்கிறார் அன்பர் இயேசுவை அண்டிக் கொள்வாயே தருணம் தப்பினால் மரணம் உன்னை பிடித்துக் கொள்ளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Yesu Paadhamae Vanthu Saerumae Thunbam Neengkumae - Inba Paava Paaramae Thaangki Irupporae Paraman Yesuvin Paadham Saerumae Paavamathai Neekki Ilaippaarudhalai Tharuvaen Enkiraar Saandhamum Manatthaazhmaiyumaayirukkiraen Ennidam Vanthu Karrukkollunggal Appothu Un Aatthumaa Ilaippaarudhal Ataiyum Enkiraar Kaanaamar Pona Aattaitthaetiyae Kalvaariyil Thongkinaar Yesu Siluvaiyin Rattham Unnai Seeraakkiyae Motsam Saerkkumae Paeyai Vendravar Un Noyai Theerppavar Thaayaippolavae Koovi Azhaikkiraar Saeyaippolavae Thaavi Avar Paadhamathai Parri Pitikkavaa Varukai Kaalamo Sameebamaakuthae Kirupai Kaalamo Nammaith Thaangkuthae Thaeva Vasananggal Ovvonraaga Niraivaeri Varukuthae Anpinaalatho Suvisaesham Alikkiraar Anbar Yesuvai Antik Kolvaayae Tharunam Thappinaal Maranam Unnai Pititthuk Kollumae