பாடல் #38274
ஆனந்தமே பரமானந்தமே
🔤 Aanandhamae Paramaanandhamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே பரமானந்தமே பேரானந்தமே ஆத்தும நேசரின் அன்பால் ஆனந்தமாமே அகிலம் அறியா அருளானந்தம் ஆதிபரன் இயேசுவால் வரும் ஒரே மெய்தேவன் உன்னத ஜீவன் உலகோர்க்குயிர் தர வந்தார் நம்பிடும் நரர்க்கு நலனளிப்பாரே ஒடி ஒடி வருவாயே சஞ்சலம் தீர்ப்பார் சர்குருநாதன் நெஞ்சத்தில் நீ நினைத்தாலே நெஞ்சத்திலுள்ள பஞ்சமா பேயை அஞ்சாமலே அதட்டிடுவார் குமாரன் இயேசு சமாதானத்தை குவலயத்தில் தர வந்தார் குருவாய் உதித்து குருசை சுமந்தார் குற்றம் நீங்க மரித்தார் மேகத்தின் மீது வேகம் வருவார் ஏகபரன் இயேசு நாதன் தீதுடையோர்க்கு தீர்ப்பளிப்பாரே தூய பரன் வருகையிலே எக்காளம் தொனிக்கும் இயேசு மணாளன் மேகமதில் வந்திடுவார் மாது திருச்சபை மணவாட்டியாம் நாம் மங்கள இன்பம் கொள்வோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae Paramaanandhamae Paeraanandhamae Aatthuma Naesarin Anpaal Aanandhamaamae Akilam Ariyaa Arulaanandham Aathibaran Yesuvaal Varum Orae Meydevan Unnatha Jeevan Ulakorkkuyir Thara Vanthaar Nampitum Nararkku Nalanalippaarae Oti Oti Varuvaayae Sanjjalam Theerppaar Sarkurunaadhan Nenjjatthil Nee Ninaitthaalae Nenjjatthilulla Panjjamaa Paeyai Anjsaamalae Adhattituvaar Kumaaran Yesu Samaathaanatthai Kuvalayatthil Thara Vanthaar Kuruvaay Uthitthu Kurusai Sumanthaar Kurtram Neengga Maritthaar Maegatthin Meethu Vaegam Varuvaar Aegaparan Yesu Naadhan Theethutaiyorkku Theerppalippaarae Thooya Paran Varukaiyilae Ekkaalam Thonikkum Yesu Manaalan Maegamathil Vanthituvaar Maathu Thirucchapai Manavaattiyaam Naam Manggala Inbam Kolvomae