பாடல் #38272
சத்திய வேதம் நித்திய வழியில்
🔤 Satthiya Vaedham Nitthiya Vazhiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வேதம், நித்திய வழியில் நேராய் நடத்தும் நிதம் அதை தியானி ஆதியந்த மில்லாதவர் அருள் ஞான தேவன் ஜோதி உருவாயமைந்த குரு இயேசு நாதன் ஜாதிகளான சகல மானிடருக்காக நித்திய வழிகாட்டி நிற்கும் சத்திய வேதமாமே நித்தம் தியானிப்போமே அஞ்ஞானத்தை அழித்து நமக்கறிவை அது ஊட்டும் விஞ்ஞானிகள் அறிந்திடாவிண் ஞானமதை காட்டும் மெய்ஞானத்தை ஊற்றி நம்மின் பேதமையை மாற்றும் கொஞ்சமுமே அஞ்சிடாமல் வேதம் வாசிப்போமே நிதம் நேசிப்போமே அன்பில் உருவாக வேண்டுமென்று வழிகாட்டி இன்ப ஒளி நம்மில் வீசி இருளை எல்லாம் ஓட்டி முன்பு இருந்த முரட்டு குணம் யாவும் விட்டு நீக்கி முற்றிலுமாய் மாற்றும் உன்னை நித்திய குருநாதம் சத்திய திருவேதம் உள்ளத்தில் மறைந்திருக்கும் பாவமெல்லாம் காட்டும் கல்லான இதயத்தையும் கரையும்படி மாற்றும் பொல்லாத வழியை மாற்றி பொன்னுலகை காட்டும் நல்ல இயேசு மன்னனிடம் கொண்டு சேர்க்கும் வேதம் கண்டு வாசி நிதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaedham, Nitthiya Vazhiyil Naeraay Natatthum Nidham Athai Thiyaani Aathiyandha Millaadhavar Arul Njaana Devan Jothi Uruvaayamaindha Kuru Yesu Naadhan Jaathigalaana Sakala Maanidarukkaaga Nitthiya Vazhikaatti Nirkum Satthiya Vaedhamaamae Nittham Thiyaanippomae Anjnjaanatthai Azhitthu Namakkarivai Athu Oottum Vinjnjaanigal Arinthitaavin Njaanamathai Kaattum Meynjaanatthai Oorri Nammin Paedhamaiyai Maarrum Konjjamumae Anjsitaamal Vaedham Vaasippomae Nidham Naesippomae Anpil Uruvaaga Vaentumenru Vazhikaatti Inba Oli Nammil Veesi Irulai Ellaam Otti Munpu Irundha Murattu Kunam Yaavum Vittu Neekki Murrilumaay Maarrum Unnai Nitthiya Kurunaadham Satthiya Thiruvaedham Ullatthil Marainthirukkum Paavamellaam Kaattum Kallaana Idhayatthaiyum Karaiyumbati Maarrum Pollaadha Vazhiyai Maarri Ponnulakai Kaattum Nalla Yesu Mannanidam Kontu Saerkkum Vaedham Kantu Vaasi Nidham