பாடல் #38267
வையகமே நீ வார்த்தையை
🔤 Vaiyakamae Nee Vaartthaiyai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வையகமே நீ வார்த்தையைக் கேளாய் மெய்யாகவே நீ இரட்சிப்பை அடைவாய் வையகம் தரா இன்பம் வல்லவர் தருவாரே எல்லா நாளும் அவரில் மகிழ்வாய் இயேசுவைப் போல தேவனுமில்லையே அவரல்லாமல் இரட்சிப்பு இல்லையே குற்றமற்ற அவர் இரத்தம் நீக்கிடுமே உன்குற்றம் குருபரனின் வார்த்தை அறிவாயே மாயை உலக வாழ்வையும் நம்பாதே மனுஷ ஞான செயலை நம்பாதே மனுவரிலே இயேசு மகத்வமானவரே அவர் நாமமே நமக்கடைக்கலமே மறுபடியும் நீ பிறக்கவேணுமே மன நிலையிலே மாறுதல் வேண்டுமே ஆவியினால் பிறந்து தேவனையே அறிந்து ஜீவ பாதையில் சென்று மகிழ்வாயே ஆதாம் ஏவைபோல் அசட்டை பண்ணாதே திதாம் உலக வாழ்வையும் நம்பாதே உலகம் ஒரு நாளில் உன்னையும் கைவிடுமே அந்நாளில் நீயும் ஏங்கி தவிப்பாயே கடைசி காலம் நெருங்கி வருதே கர்த்தரின் வருகை சமீபமாகுதே நியாயம் தீர்க்க வாராரே நியாயாதிபதி இயேசு அநியாயம் செய்வோரை அழிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaiyakamae Nee Vaartthaiyaik Kaelaay Meyyaagavae Nee Iratsippai Ataivaay Vaiyakam Tharaa Inbam Vallavar Tharuvaarae Ellaa Naalum Avaril Makizhvaay Yesuvaip Pola Devanumillaiyae Avarallaamal Iratsippu Illaiyae Kurtramartra Avar Rattham Neekkitumae Unkurtram Kurubaranin Vaartthai Arivaayae Maayai Ulaka Vaazhvaiyum Nampaathae Manusha Njaana Seyalai Nampaathae Manuvarilae Yesu Makathvamaanavarae Avar Naamamae Namakkataikkalamae Marubatiyum Nee Pirakkavaenumae Mana Nilaiyilae Maarudhal Vaentumae Aaviyinaal Piranthu Devanaiyae Arinthu Jeeva Paathaiyil Senru Makizhvaayae Aathaam Aevaipol Asattai Pannaathae Thithaam Ulaka Vaazhvaiyum Nampaathae Ulakam Oru Naalil Unnaiyum Kaivitumae Annaalil Neeyum Aengki Thavippaayae Kataisi Kaalam Nerungki Varuthae Karttharin Varukai Sameebamaakuthae Niyaayam Theerkka Vaaraarae Niyaayaathibathi Yesu Aniyaayam Seyvorai Azhippaarae