பாடல் #38262
பாவம் செய்தறியா உமக்கு
🔤 Paavam Seythariyaa Umakku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் செய்தறியா உமக்கு பாடுகள் என்னத்திற்கோ நீதியை செய்தறியா நீசன் என்னை மோட்சத்தில் சேர்ப்பதற்கோ தேவ திருமுகத்தை - பார்க்கையில் தேகம் நடுங்குதையா - ஆவலாய் உம்பரத்தில் அடியேனை நினைத்தருள் தாருமையா கலகக்காரனய்யா பொல்லா கள்ளனும் நான்தானையா உளையிலிருந்தென்னை தூக்கிட உயர்த்தப்பட்டரோ ஐயா சாந்தம் இல்லாததினால் சமாதானம் இழந்தேனையா சாந்த சொரூபியே உம் தயவால் சகிப்பை தாருமையா நீதிநெறி தவறி மீறி நாறிப்போனேனே ஐயா ஆதி அனாதி அன்பே அடியேனை ஆசீர்வதியுமையா பாவி மனுஷியைபோல் மனம் பதைத்த பேதுருபோல் தாவி உம் பாதமுத்தி செய்து நிற்கும் பாவியைக் காருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Seythariyaa Umakku Paatugal Ennatthirko Neethiyai Seythariyaa Neesan Ennai Motsatthil Saerppatharko Thaeva Thirumugatthai - Paarkkaiyil Thaegam Natungkuthaiyaa - Aavalaay Umbaratthil Atiyaenai Ninaittharul Thaarumaiyaa Kalakakkaaranayyaa Pollaa Kallanum Naanthaanaiyaa Ulaiyilirunthennai Thookkida Uyartthappattaro Aiyaa Saandham Illaadhathinaal Samaathaanam Izhanthaenaiyaa Saandha Soroopiyae Um Thayavaal Sakippai Thaarumaiyaa Neethineri Thavari Meeri Naaripponaenae Aiyaa Aathi Anaathi Anpae Atiyaenai Aaseervathiyumaiyaa Paavi Manushiyaipol Manam Pathaittha Paethurupol Thaavi Um Paadhamutthi Seythu Nirkum Paaviyaik Kaarumaiyaa