பாடல் #38260
மின்னலைப்போல் வேகமதாய்
🔤 Minnalaippol Vaegamathaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மின்னலைப்போல் வேகமதாய் மேசியாவான் மேகமதில் வல்லமையாய் அவர் வந்திடுவார் வானத்தின் சத்துவங்கள் அசைகின்றதே வல்லவர் வருகையை தெரிவிக்கிறதே அக்கிரமம் மிகுந்து பெருகி வருதே அன்பு அநேகரில் தாழ்ச்சி அடையுதே அந்திக்கிறிஸ்துவின் கிரியைகளெல்லாம் அந்தரங்கமாக நடைபெறுகிறதே வஞ்சக ஆவி வல்லக்கிரியை நல்ல பக்தரையும் நாசமாக்கிடுதே நினையா நேரம் வந்திடுவாரே அணையா வெளிச்சத்தை அறிந்திடுவாரே ஆயத்தமாய் நீர் விழித்திருப்பீரே அண்ணலும் உன்னை அழைத்து செல்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Minnalaippol Vaegamathaay Maesiyaavaan Maegamathil Vallamaiyaay Avar Vanthituvaar Vaanatthin Satthuvanggal Asaikindrathae Vallavar Varukaiyai Therivikkirathae Akkiramam Mikunthu Peruki Varuthae Anpu Anaegaril Thaazhchsi Ataiyuthae Anthikkiristhuvin Kiriyaigalellaam Andharanggamaaga Nataiperukirathae Vanjjaka Aavi Vallakkiriyai Nalla Paktharaiyum Naasamaakkituthae Ninaiyaa Naeram Vanthituvaarae Anaiyaa Velicchatthai Arinthituvaarae Aayatthamaay Neer Vizhitthiruppeerae Annalum Unnai Azhaitthu Selvaarae