பாடல் #3826
வந்தருள் இவ்வாலயத்தில்
🔤 Vandharul Ivvaalayatthil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே - உனை வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி ஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும் பொருட்டெழுந்து தீய வினை மிதித் தழிப்பாய் தேவர் பெருமானே பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க உருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம் என்றும் சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும் தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயா செஞ் சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்க் குகந்த உன்றன் சீரடிக்கண் சேர்பவர்க்கே ஆருயீர் உண்டாவதற்கே பூவுலகை ஆளும் மன்னர் போதம் உணர் வேதியர் உன் பொற் பதத்தை அர்ச்சிக்கவேநற் பதம் தா தேவே மூவுலகிலும் துதியும் முக்யம் மகத்துவம் கனமும் மா பலமுமே உமக்கே மங்களம் உண்டாவதாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vandharul Ivvaalayatthil Makimai Aekovaavae - Unai Vaazhtthum Atiyaarkku Nidham Vaayttha Peru Vaazhvae Anthi Pakal Ingkunai Vandhataiyum Atiyaark Kirangki Aadharavaay Aantu Kolvaay Aathi Paraabaran Kumaaraa Thiruk Karunai Mozhiyaal Manath Thirukkarukkum Poruttezhunthu Theeya Vinai Mithith Thazhippaay Thaevar Perumaanae Perukkamula Un Vasanam Paethaiyarukkae Palikka Urukkamudan Irangkum Aiyaa Un Pathamae Thanjjam Enrum Sanjjalam Minjsum Manathaal Saranam Unakkenru Varum Thamiyar Thamak Kaarudhalaayth Thayaisey Aathisaeyaa Senj Sol Malindha Pulavar Seppu Thamizhk Kugandha Undran Seeratikkan Saerpavarkkae Aaruyeer Untaavatharkae Poovulakai Aalum Mannar Podham Unar Vaethiyar Un Por Pathatthai Archsikkavaenar Patham Thaa Thaevae Moovulakilum Thuthiyum Mukyam Makatthuvam Kanamum Maa Palamumae Umakkae Manggalam Untaavathaaga