பாடல் #38256
யார் அறிவார் அவரின்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
யார் அறிவார் அவரின் வருகையை தூதரும் தூயக்குமாரனும் அறியார் ஒலிவமலையில் தோன்றிடும் காட்சி உத்தமரின் கண்கள் கண்டு களிக்கும் இயேசுவை தொழுது இரட்சிப்பை அடைந்தோர் எருசலேம் ஆலயமாயிருப்பார்கள் இரண்டுபேர் வயலில் வேலை செய்வார்கள் ஒருவனை விட்டு மற்றொருவனை எடுப்பார் இரண்டுபேர் திரிகை திரித்திடுவார்கள் ஒருவளை விட்டு மற்றொருவளை எடுப்பார் கர்த்தரின் பிள்ளைகள் காணாமல் போவார் காணாத மக்களை தேடி அலைவார் இக்கட்டும் இடுக்கமுமான அந்நாளே இயேசு வல்லாதவர் கலங்கிடுவாரே