பாடல் #38251
கதிரவன் எழும் காலையில்
🔤 Kathiravan Ezhum Kaalaiyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கதிரவன் எழும் காலையில் - நம் கர்த்தன் இயேசுவை காணவே கருத்தொருமித்து பரத்தின் தேவனை கரங்கூப்பி துதி பாடுவோம் கடந்த இரவிலே காத்தவர் - புது காலை காணவே செய்தவர் காலை தேடுவோர் கண்டடைவார் என்ற வாக்கு மாறாதவர் கர்த்தத்துவம் தோளில் சுமந்தவர் கருணை உள்ளம் அணிந்தவர் காரிருளின் காலை நேரத்தில் கனிவுடன் துதி பாடுவோம் ஏழைக் கோலமாய் வந்தவர் - முண் ஏதேன் மீறுதல் தீர்ப்பவர் நீதியாம் அருள் இயேசு நாதன் அனாதியாய் அவதரித்தவர் மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே ஆவிக்குள் அடங்கி - அரும் தேவ ஊழியம் செய்யவே அல்லும் பகலும் போற்றுவோம் - அவர் அன்பின் துதி சாற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றோதுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kathiravan Ezhum Kaalaiyil - Nam Kartthan Yesuvai Kaanavae Karutthorumitthu Paratthin Devanai Karangkooppi Thuthi Paatuvom Katandha Iravilae Kaatthavar - Puthu Kaalai Kaanavae Seythavar Kaalai Thaetuvor Kandataivaar Endra Vaakku Maaraadhavar Kartthatthuvam Tholil Sumandhavar Karunai Ullam Anindhavar Kaarirulin Kaalai Naeratthil Kanivudan Thuthi Paatuvom Aezhaik Kolamaay Vandhavar - Mun Aethaen Meerudhal Theerppavar Neethiyaam Arul Yesu Naadhan Anaathiyaay Avatharitthavar Maamisamum Kannum Indha Maaykaiyil Vizhaamalae Aavikkul Adangki - Arum Thaeva Oozhiyam Seyyavae Allum Pakalum Porruvom - Avar Anpin Thuthi Saarruvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Enrothuvom