பாடல் #38249
காணாத ஆட்டை தேடியே ஏறாத
🔤 Kaanaadha Aattai Thaetiyae Aeraadha
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணாத ஆட்டை தேடியே ஏறாத மலைமேல் ஏறியே கண்டுபிடித்து கையாலணைத்து தோளின்மேல் சுமந்தாரே தொழுவத்தில் சேர்த்தாரே என் பாவகாயங்கட்டி என் பயம் யாவும் நீக்கி என் சொந்தம் என்ற அவர் இன்பசத்தம் கேட்டானந்தம் கொண்டேனே கிருபையை பெற்றேனே உனக்காக பாடுகள் பட்டேன் உன் பாவபாரம் சுமந்தேன் துக்க முகங்காட்டித் துயர தொனியில் நேசிக்கமாட்டாயா என்றார் நேசிக்கமாட்டாயா என்றார் ஐங்காயங் காட்டினாரே அருஞ் சிலுவை பாரத்தோடே முட்கிரீடம் சூடி மூன்றாணியில் முழுபெலத்தோடு நின்றவராய் மகளே (மகனே) என்றழைத்தாரே ஒரு போதும் மாறா இன்ப ஒப்பற்ற திவ்ய அன்பை நினைக்கையிலே நித்யானந்தமே பொங்கி மகிழுது என்னுள்ளமே எங்குமில்லா பேரானந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaadha Aattai Thaetiyae Aeraadha Malaimael Aeriyae Kantupititthu Kaiyaalanaitthu Tholinmael Sumanthaarae Thozhuvatthil Saertthaarae En Paavakaayanggatti En Payam Yaavum Neekki En Sondham Endra Avar Inbasattham Kaettaanandham Kontaenae Kirupaiyai Perraenae Unakkaaga Paatugal Pattaen Un Paavapaaram Sumanthaen Thukka Mugangkaattith Thuyara Thoniyil Naesikkamaattaayaa Enraar Naesikkamaattaayaa Enraar Aingkaayang Kaattinaarae Arunj Siluvai Paaratthotae Mutkireedam Sooti Moonraaniyil Muzhupelatthotu Nindravaraay Makalae (makanae) Endrazhaitthaarae Oru Pothum Maaraa Inba Oppartra Thivya Anpai Ninaikkaiyilae Nithyaanandhamae Pongki Makizhuthu Ennullamae Engkumillaa Paeraanandhamae