பாடல் #38248
தொண்டு செய்ய வருவி
🔤 Thontu Seyya Varuvi
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொண்டு செய்ய வருவீர் தூயன் இயேசு நாமத்தில் அல்லேலூயா பாட்டுடன் ஆ ஆ- ஆ ஆத்துமாதாயம் செய்வோம் ஆ-ஆ-ஆ ஆத்தும மாயை உலகில் மயங்கிடும் மாந்தர்கள் மந்தையில் சேர்ந்து மகிமையில் மகிழ சுத்த சத்தியத்தை இத்தரையில் நாம் சத்தியமாய்க் கூறுவோம் ஆ-ஆ-ஆ - சத்திய பாவிகளையே ரட்சிக்க வந்தார் மேவியே நமக்கு ரட்சிப்பைதந்தார். ஆவியில் நிறைந்து அவரில் மகிழ்ந்து ஆத்துமா தாயம் செய்வோம் ஆ-ஆ-ஆத்தும கடும் வெயிலில் பெரும் மழையில் கஷ்டங்கள் மத்தியில் காடு மலையில் நடுப்பகலோ நள்ளிரவிலோ நல்ல ஊழியம் செய்வோம் ஆ-ஆ-நல்ல அசைவில்லா ராஜ்யம் பெறுகிற நாமே அன்பரில் பயத்தோடும் பக்தியோடுமே துன்பம் சகித்து தூயனைக் காண ஆத்துமாதாயம் செய்வோம் ஆ ஆ -ஆத்தும ஆத்துமாதாயம் செய்திடுவோமே ஆனந்தக் கீரிடம் பெற்றிட நாமே புறப்படுவோமே போர் முனையில் நாம் ஜீவன் கொடுத்திடவே ஆ-ஆ ஜீவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thontu Seyya Varuveer Thooyan Yesu Naamatthil Allaelooyaa Paattudan Aa Aa- Aa Aatthumaathaayam Seyvom Aa-aa-aa Aatthuma Maayai Ulakil Mayangkitum Maandharkal Manthaiyil Saernthu Makimaiyil Makizha Suttha Satthiyatthai Ittharaiyil Naam Satthiyamaayk Kooruvom Aa-aa-aa - Satthiya Paavigalaiyae Ratsikka Vanthaar Maeviyae Namakku Ratsippaidhanthaar. Aaviyil Nirainthu Avaril Makizhnthu Aatthumaa Thaayam Seyvom Aa-aa-aatthuma Katum Veyilil Perum Mazhaiyil Kashtanggal Matthiyil Kaatu Malaiyil Natuppakalo Nalliravilo Nalla Oozhiyam Seyvom Aa-aa-nalla Asaivillaa Raajyam Perukira Naamae Anbaril Payatthotum Pakthiyotumae Thunbam Sakitthu Thooyanaik Kaana Aatthumaathaayam Seyvom Aa Aa -aatthuma Aatthumaathaayam Seythituvomae Aanandhak Keeridam Perrida Naamae Purappatuvomae Por Munaiyil Naam Jeevan Kotutthidavae Aa-aa Jeevan