பாடல் #38245
பிதாவே இவர்களுக்கு
🔤 Pithaavae Ivarkalukku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே இவர்களுக்கு மன்னியுமே தாங்கள் செய்வதின்னதென்று அறியார்கள் - இவர்கள் உலகினில் உம்மையல்லால் உயர் நிலை வேறில்லை உம்முகம் பார்த்தருள் புரிவாய் உம் அருளே -பிதா கொலைபாதகர் தம்மை குருசில் அறையும் நேரம் கோரக்குருதி தம்மில் ஆறாய் வடியும் நேரம் போதித்த போதனை சாதித்துக் காட்டியே பாதகரின் பாவம் ஏகன் சுமந்தவராய் அறிந்தும் அறியாமலும் செய்தாலும் பாவமொன்றே அருள் நாயகன் அன்பு அகத்தினில் வரவே பிறர் பிழையை மன்னித்து பிதாவின் அன்பை காட்டி அன்பின் ஆவியைபெற ஆயத்தம் அடைவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Ivarkalukku Manniyumae Thaanggal Seyvathinnathenru Ariyaarkal - Ivarkal Ulakinil Ummaiyallaal Uyar Nilai Vaerillai Ummugam Paarttharul Purivaay Um Arulae -pithaa Kolaipaadhakar Thammai Kurusil Araiyum Naeram Korakkuruthi Thammil Aaraay Vatiyum Naeram Pothittha Podhanai Saathitthuk Kaattiyae Paadhakarin Paavam Aegan Sumandhavaraay Arinthum Ariyaamalum Seythaalum Paavamonrae Arul Naayakan Anpu Agatthinil Varavae Pirar Pizhaiyai Mannitthu Pithaavin Anpai Kaatti Anpin Aaviyaipera Aayattham Ataivom