பாடல் #38244
கடைக்கண் நோக்கி
🔤 Kataikkan Nokki
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைக்கண் நோக்கி கள்ளன் கதறிடவே கருணாகரனும் அரனும் அன்புவூர இன்றைக்கே என் பரதீசிலிருப்பாய் என்றுரைத்து அணைத்து ஆதரவு கொடுத்து வேண்டும் பொருளுனக்கு வேந்தன் அறிந்துள்ளாரே தேவன் கிருபை தந்தால் திரள் பாவம் மூடுமே மேவி மேசியாவை நாம் கூவி அழைத்தோமானால் ஆவியைத் தந்து நம்மை அடைக்கலமாகக் கொள்வார் தன்னையே தான் வெறுத்து தன் சிலுவை எடுத்து என்னை பின்பற்றிவா என்றேசு மொழிந்தனரே தன் சிலுவை சுமந்து, தன்னை அறிந்துணர்ந்து கள்ளனைப்போல நாமும் கர்த்தாவை அண்டிக் கொள்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataikkan Nokki Kallan Katharidavae Karunaagaranum Aranum Anpuvoora Inraikkae En Paratheesiliruppaay Enruraitthu Anaitthu Aadharavu Kotutthu Vaentum Porulunakku Vaendhan Arinthullaarae Devan Kirupai Thanthaal Thiral Paavam Mootumae Maevi Maesiyaavai Naam Koovi Azhaitthomaanaal Aaviyaith Thanthu Nammai Ataikkalamaagak Kolvaar Thannaiyae Thaan Verutthu Than Siluvai Etutthu Ennai Pinbarrivaa Enraesu Mozhindhanarae Than Siluvai Sumanthu, Thannai Arinthunarnthu Kallanaippola Naamum Kartthaavai Antik Kolvom