பாடல் #38238
ஆதிமெய்தேவனே உன் அன்பிற்கோர்
🔤 Aathimeydevanae Un Anpirkor
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதிமெய்தேவனே உன் அன்பிற்கோர் நீதியாம் ஜோதி அனாதிதேவனே - உன் நீதிக்கோர் எல்லையுண்டோ எல்லையுண்டோ எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர் பத்திலோர் பங்கு போதாதெனறெண்ணி - நான் தத்தம் செய்தேன் உமக்கே எத்தன் எனக்காக - இன்னுயிர் கொடுத்தீரே இயேசுவின் அன்பிற்கு எதை செலுத்துவேன் இதயம் ஈடாகுமோ ஆழ்ந்த கடலிலே அமிழ்ந்து போன என்னை தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க - என் துதிகள் தான் போதுமோ பாவத்தில் மாண்ட என்னை - கோபத்தால் அழிக்காமல் இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து - நான் பட்சமாய் போற்றிடுவேன் கெத்செமனே பூங்காவில் - பட்சமாய் வேண்டி நிற்கும் இரத்த வெள்ளத்தில் கத்தி கதறும் மெய் சத்தம் தொனித்திடுதே அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில் நான்தான் பயப்படாதிருங்கள் என்ற - உம் அன்பின் தொனி கேட்குதே எண்ணும் நன்மை எதுவும் என்னிலே இல்லை ஐயா பின்னே ஏன் என்னை நேசித்தீரோ என்னில் கொண்ட உம் அன்புதானோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathimeydevanae Un Anpirkor Neethiyaam Jothi Anaathidevanae - Un Neethikkor Ellaiyunto Ellaiyunto Etthanaiyo Paavanggal Atthanae Agarrineer Patthilor Pangku Pothaathenarenni - Naan Thattham Seythaen Umakkae Etthan Enakkaaga - Innuyir Kotuttheerae Yesuvin Anpirku Ethai Selutthuvaen Idhayam Eetaakumo Aazhndha Katalilae Amizhnthu Pona Ennai Thookki Etuttha Um Anpai Ninaikka - En Thuthigal Thaan Pothumo Paavatthil Maanda Ennai - Kobatthaal Azhikkaamal Iratsittha Undhan Anpai Ninaitthu - Naan Patsamaay Porrituvaen Kethsemanae Poongkaavil - Patsamaay Vaenti Nirkum Rattha Vellatthil Katthi Katharum Mey Sattham Thonitthituthae Alaiyum Puyalumaay Amizhtthi Veezhtthukaiyil Naanthaan Payappataathirunggal Endra - Um Anpin Thoni Kaetkuthae Ennum Nanmai Ethuvum Ennilae Illai Aiyaa Pinnae Aen Ennai Naesittheero Ennil Konda Um Anputhaano