பாடல் #38231
உம் சித்தம் இயேசுவே
🔤 Um Sittham Yesuvae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் இயேசுவே நானோர் மண்பாண்டமே உத்தம ஜீவியாய் உயர்த்த வேண்டுமே நித்தம் என் பந்தயம் சத்திய சிலுவையே சித்தம் அறிந்துயான் செய்திட வேண்டுமே அலகையின் ஆஸ்தியும் உலகின் சம்பாத்தியமும் ஓர் நாளில் தூசியாய் ஒழிந்து போய்விடும் அந்தர வானமும் அலகில பூமியும் வெந்து உருகிப்போம் நீர் வரும் நாளிலே உற்றாரும் மற்றாரும் உறவினர் யாவரும் மருளவைத்தெந்தனை வெருள விரட்டினும் அருளே என் தாபரம் ஆண்டவனின் கரம் அணைத்து எடுத்து தம் அண்டையில் சேர்க்குமே உயர்வான கல்வியும் உத்தியோகப் பட்டமும் உலகத்தின் ஞானமும் என்னோடு சேருமோ மரணத்தின் ஊடவே மறைந்தே போகுமே என்னோடு சேர்வதென் பாவமும் புண்ணியமே பெலவீன பாவி நான் சுகவீன தேகி நான் உலகத்தின் மாய்கையில் அலைந்தழியாமல் நான் உலக முடிவிலே உம்மை நான் சந்திக்க என்னை நடத்தும் என் இயேசுதேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Yesuvae Naanor Manpaandamae Utthama Jeeviyaay Uyarttha Vaentumae Nittham En Pandhayam Satthiya Siluvaiyae Sittham Arinthuyaan Seythida Vaentumae Alakaiyin Aasthiyum Ulakin Sampaatthiyamum Or Naalil Thoosiyaay Ozhinthu Poyvitum Andhara Vaanamum Alakila Poomiyum Venthu Urukippom Neer Varum Naalilae Urraarum Marraarum Uravinar Yaavarum Marulavaitthendhanai Verula Virattinum Arulae En Thaabaram Aandavanin Karam Anaitthu Etutthu Tham Antaiyil Saerkkumae Uyarvaana Kalviyum Utthiyogap Pattamum Ulakatthin Njaanamum Ennotu Saerumo Maranatthin Oodavae Marainthae Pokumae Ennotu Saervathen Paavamum Punniyamae Pelaveena Paavi Naan Sugaveena Thaeki Naan Ulakatthin Maaykaiyil Alaindhazhiyaamal Naan Ulaka Mutivilae Ummai Naan Santhikka Ennai Natatthum En Yesuthaevaa