பாடல் #38229
இயேசென்னும் தெய்வம்
🔤 Yesennum Theyvam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசென்னும் தெய்வம் இரட்சகராக பெத்தலையில் பிறந்தார் - இன்று வானவர் போற்ற மானிடர் தேற்ற மானிலத்தில் பிறந்தார் - இயேசு மானிலத்தில் பிறந்தார். மன்னன் ஏரோது மனங்கலங்க அண்ணலும் அவதரித்தார் மண்ணிலே அண்ணலும் அவதரித்தார் கர்த்தாதி கர்த்தா ராஜாதி ராஜா நிந்தை சுமந்தவராய் - அந்தோ கந்தை அணிந்தவராய் தாழ்மையை காட்ட ஏழ்மையாய் வந்தார் மேன்மையெல்லாம் வெறுத்தார் - அந்தோ மேன்மையெல்லாம் வெறுத்தார் மகிமையின் தேவன் மனுஷ ரூபமாய் மண்ணில் அவதரித்தார் - இயேசு மண்ணில் அவதரித்தார் மரண பரியந்தம் தம்மையே தாழ்த்தி மேலான நாமம் பெற்றார் - இயேசு மேலான நாமம் பெற்றார் மாயை உலக மானிடர்க்காக மனம் பதைத்தவராய் தேவன் மனம் பதைத்தவராய் மா பாவம் நீக்கி மாஜோதி வீச மண்ணில் அவதரித்தார் - தேவன் மண்ணில் அவதரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesennum Theyvam Iratsakaraaga Petthalaiyil Piranthaar - Inru Vaanavar Portra Maanidar Thaertra Maanilatthil Piranthaar - Yesu Maanilatthil Piranthaar. Mannan Aerothu Mananggalangga Annalum Avatharitthaar Mannilae Annalum Avatharitthaar Kartthaathi Kartthaa Raajaathi Raajaa Ninthai Sumandhavaraay - Antho Kanthai Anindhavaraay Thaazhmaiyai Kaatta Aezhmaiyaay Vanthaar Maenmaiyellaam Verutthaar - Antho Maenmaiyellaam Verutthaar Makimaiyin Devan Manusha Roobamaay Mannil Avatharitthaar - Yesu Mannil Avatharitthaar Marana Pariyandham Thammaiyae Thaazhtthi Maelaana Naamam Perraar - Yesu Maelaana Naamam Perraar Maayai Ulaka Maanidarkkaaga Manam Pathaitthavaraay Devan Manam Pathaitthavaraay Maa Paavam Neekki Maajothi Veesa Mannil Avatharitthaar - Devan Mannil Avatharitthaar