பாடல் #38226
பரிசுத்தராயிருங்கள் தேவதாசரே
🔤 Parisuttharaayirunggal Thaevathaasarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தராயிருங்கள் தேவதாசரே திருசித்தம் செய்து தேவராஜ்ஜியத்தில் சேரவே தினம் தினம் இயேசுவின் திரு ஒளி வீசுவோம் பரிசுத்த ஜீவியம் பாரில் நிறைவேற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அவர் துதிசாற்றுவோம் நடைகளிலும் பெரும் படைகளிலும் - நாம் உடைகளிலும் இடைவிடாமலே காட்டுவோம் வாக்குகளிலும் நம் போக்குகளிலும் குற்றம் நீக்குவதிலும் குறைபோக்குவதிலும் நாம் சாலைகளிலும் எல்லா மூலைகளிலும் சொந்த வேலைகளிலும் எந்த சோலைகளிலும் நாம் ஜாதிகளிலும் எந்த செய்திகளிலும் எல்லா வீதிகளிலும் நல்ல நீதிகளிலும் - நாம் ஜெப ஜீவியம் செய்து திருஜெயக்கொடி ஏற்றுவோம் அபயமிடுவோருக்கு ஆண்டவரைக் காட்டுவோம் சத்திய ஆவியானவர் நித்தம் நம்மில் மேவியே சித்தம் நிறைவேற நம்பை தத்தம் செய்வோம் என்றுமே பரிசுத்தர் கூட்டத்தில் திருசுதன் தோன்றுவார் தரிசிக்க அனுதினம் திருசித்தம் நோக்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharaayirunggal Thaevathaasarae Thirusittham Seythu Thaevaraajjiyatthil Saeravae Thinam Thinam Yesuvin Thiru Oli Veesuvom Parisuttha Jeeviyam Paaril Niraivaerruvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paatuvom Allaelooyaa Allaelooyaa Avar Thuthisaarruvom Nataigalilum Perum Pataigalilum - Naam Utaigalilum Itaivitaamalae Kaattuvom Vaakkugalilum Nam Pokkugalilum Kurtram Neekkuvathilum Kuraipokkuvathilum Naam Saalaigalilum Ellaa Moolaigalilum Sondha Vaelaigalilum Endha Solaigalilum Naam Jaathigalilum Endha Seythigalilum Ellaa Veethigalilum Nalla Neethigalilum - Naam Jeba Jeeviyam Seythu Thirujeyakkoti Aerruvom Abayamituvorukku Aandavaraik Kaattuvom Satthiya Aaviyaanavar Nittham Nammil Maeviyae Sittham Niraivaera Nampai Thattham Seyvom Enrumae Parisutthar Koottatthil Thirusudhan Thonruvaar Tharisikka Anuthinam Thirusittham Nokkuvom