பாடல் #3821
வடதேசம் செல்லும் வீரர்
🔤 Vatathaesam Sellum Veerar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே? பலதேசம் செல்லும்படி கூறினாரே! வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே? எத்தனைக் கூட்டங்கள் இங்கே! எத்தனைக் கொள்கைகள் இங்கே! ஒன்றும் அறியாதோர் அங்கே! கோடிக் கோடியாக உண்டே! யாருமில்லை, இன்று யாருமில்லை இயேசுவை அறிவிக்க யாருமில்லை அரும்பெரும் கிருபையாம் வாழ்வு தெற்கிலே கருகிவிடாது தேவையான இடம் செல்ல வழிசெய்யும் இயேசுவே இராஜா! இஸ்ரவேலே எந்த நாள் வரைக்கும் எருசலேம் மதில்களில் முடங்கி நிற்பாய்? போட்டிப் பொறாமைகள் அகற்றி இயேசுவைப் பங்கிடல் தவிர்த்து விசுவாசிகள் யாரும் சேர்ந்து செயல்படும் காலம் இதுவே இயேசுவுக்கு இது மகிமை தரும் ஆத்துமாக்கள் யாவும் பயன் அடையும் கல்லூரிகளில் உள்ள வாலிபரே ஆலயங்களில் உள்ள இளைஞர்களே தேவனின் பணிக்குத் தோள்கொடுப்பவர் யார்? விடுதலைச் செய்தியை சொல்பவர் யார்? முன்வருவீர் உடன் முன்வருவீர்! தடைகளைத் தாண்டி நீர் முன்வருவீர்! என்னைத் தருகிறேன் தேவா தம்மையே தந்தீர் நாதா காட்டும் இடம் எல்லாம் செல்ல பின் திரும்பாது நான் நிற்க ஏற்றுக்கொள்ளும் என்னை ஏற்றுக்கொள்ளும் பாதத்தில் பணிகிறேன் வழி நடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vatathaesam Sellum Veerar Yaar Nammilae? Palathaesam Sellumbati Koorinaarae! Vatathaesam Sellum Veerar Yaar Nammilae? Etthanaik Koottanggal Ingkae! Etthanaik Kolkaigal Ingkae! Onrum Ariyaathor Angkae! Kotik Kotiyaaga Untae! Yaarumillai, Inru Yaarumillai Yesuvai Arivikka Yaarumillai Arumperum Kirupaiyaam Vaazhvu Therkilae Karukivitaathu Thaevaiyaana Idam Sella Vazhiseyyum Yesuvae Iraajaa! Isravaelae Endha Naal Varaikkum Erusalaem Mathilkalil Mudangki Nirpaay? Pottip Poraamaigal Agarri Yesuvaip Pangkidal Thavirtthu Visuvaasigal Yaarum Saernthu Seyalpatum Kaalam Ithuvae Yesuvukku Ithu Makimai Tharum Aatthumaakkal Yaavum Payan Ataiyum Kalloorigalil Ulla Vaalibarae Aalayanggalil Ulla Ilainjarkalae Devanin Panikkuth Tholkotuppavar Yaar? Vitudhalaich Seythiyai Solpavar Yaar? Munvaruveer Udan Munvaruveer! Thataigalaith Thaanti Neer Munvaruveer! Ennaith Tharukiraen Thaevaa Thammaiyae Thantheer Naathaa Kaattum Idam Ellaam Sella Pin Thirumpaathu Naan Nirka Aerrukkollum Ennai Aerrukkollum Paadhatthil Panikiraen Vazhi Natatthum