பாடல் #37998
பரலோக நாடெந்தன் இன்பநாடதில்
🔤 Paraloga Naatendhan Inbanaadathil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக நாடெந்தன் இன்பநாடதில் பரிசுத்தர் கூட்டத்தில் சேர்ந்திடுவேன் - பரமானந்த கீதம் பாடிடுவேன் அங்கே பரிசுத்தர் ஒளியின் பவனியில் புகுவேன் பரமனைத் துதித்து பயணத்தை முடிப்பேன் பாரங்கள் யாவும் நீக்கி, பக்தியாய் நித்தியரோடிருப்பேன் இயேசுவே இங்கென் சம்பத்து என்றேன் ஈலோக இன்பம் குப்பை என்றெண்ணினேன் இயேசுவில் மகிழ்ந்திடுவேன், அந்நாட்டில் என்றென்றும் வாழ்ந்திடுவேன் வானம் முழங்க புவி அதிசயிக்க வருவார் இயேசு வானசேனையுடன் வாடாமுடி சூடுவார் என்னோடு நீடுழி வாழ்ந்திடுவார் மரணமாம் யோர்தானை மகிமையாய் கடப்பேன் மகிபனின் வருகை இருப்பினும் சந்திப்பேன் மங்களம் பாடிடுவேன், இயேசுவில் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன் அழுகை கூக்குரல் அங்கே இல்லை அடக்க ஆராதனையும் கிடையாது ஆண்டவரில் மகிழ்ந்து அல்லேலூயா அனுதினம் பாடிடுவேன் இயேசுவின் ரூபம், என் பிரியம் தானே இயேசுவை சேர என் உள்ளம் பொங்குதே இயேசுவின் ஒளிக்காணுதே என் கண்கள் இயேசுவை வரவேற்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Naatendhan Inbanaadathil Parisutthar Koottatthil Saernthituvaen - Paramaanandha Keedham Paatituvaen Angkae Parisutthar Oliyin Pavaniyil Pukuvaen Paramanaith Thuthitthu Payanatthai Mutippaen Paaranggal Yaavum Neekki, Pakthiyaay Nitthiyarotiruppaen Yesuvae Ingken Sambatthu Enraen Eeloga Inbam Kuppai Enrenninaen Yesuvil Makizhnthituvaen, Annaattil Enrenrum Vaazhnthituvaen Vaanam Muzhangga Puvi Athisayikka Varuvaar Yesu Vaanasaenaiyudan Vaataamuti Sootuvaar Ennotu Neetuzhi Vaazhnthituvaar Maranamaam Yorthaanai Makimaiyaay Katappaen Makibanin Varukai Iruppinum Santhippaen Manggalam Paatituvaen, Yesuvil Makizhnthu Vaazhnthituvaen Azhukai Kookkural Angkae Illai Adakka Aaraadhanaiyum Kitaiyaathu Aandavaril Makizhnthu Allaelooyaa Anuthinam Paatituvaen Yesuvin Roobam, En Piriyam Thaanae Yesuvai Saera En Ullam Pongkuthae Yesuvin Olikkaanuthae En Kankal Yesuvai Varavaerkuthae