பாடல் #37994
சோர்ந்து போகாதே நெஞ்சே
🔤 Sornthu Pokaathae Nenjsae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போகாதே நெஞ்சே சோர்ந்து போகாதே நெஞ்சே கண்டழைத்த இயேசு உன்னை கைவிடவே மாட்டார் சோதனைகள் பலவாய் மேகம்போல் சூழ்ந்திட்டாலும் வேதனை விதவிதமாய் சூழ்ந்துன்னை நெருங்கிட்டாலும் கஷ்டம் நஷ்டம் வந்திட்டாலும் கர்த்தனை நோக்கிச் சொல்லு துஷ்டனின் சூழ்ச்சி எல்லாம் தூயன் இயேசுவால் வெல்லு வெள்ளம் பெருகினாலும் வல்லமை குன்றிடாதே வல்லவன் வாக்குத்தத்தம் ஒன்றும் மாறி போகாதே முட்களுக்குள் லீலிபோல மூர்க்கர் உன்னை நெருக்கினாலும் கற்களுக்குள் ஸ்தேவானைப் போல் கர்த்தரை கண்டிடுவோம் வாக்களித்த தேவனை நீ பாடியே கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்கிட மன்றாடு துன்பத்தின் பாதை சென்று தூயனின் முன்னே நிற்போம் அன்பரில் நிலைத்திருந்து அவர் சாயலணிவோம் பொன்னைப் போல் புடமிட்டாலும் தன் ஒளி மங்கிடாதே விண்ணவர் சாயலாக பொன்னகர் சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Pokaathae Nenjsae Sornthu Pokaathae Nenjsae Kandazhaittha Yesu Unnai Kaividavae Maattaar Sodhanaigal Palavaay Maegampol Soozhnthittaalum Vaedhanai Vidhavidhamaay Soozhnthunnai Nerungkittaalum Kashtam Nashtam Vanthittaalum Kartthanai Nokkich Sollu Thushtanin Soozhchsi Ellaam Thooyan Yesuvaal Vellu Vellam Perukinaalum Vallamai Kunritaathae Vallavan Vaakkutthattham Onrum Maari Pokaathae Mutkalukkul Leelipola Moorkkar Unnai Nerukkinaalum Karkalukkul Sthaevaanaip Pol Karttharai Kantituvom Vaakkalittha Devanai Nee Paatiyae Kontaatu Ookkamaana Aavi Unnai Thaangkida Manraatu Thunbatthin Paathai Senru Thooyanin Munnae Nirpom Anbaril Nilaitthirunthu Avar Saayalanivom Ponnaip Pol Pudamittaalum Than Oli Mangkitaathae Vinnavar Saayalaaga Ponnakar Saernthituvom