பாடல் #37992
ஆவி இப்போது அனுப்பும்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
ஆவி இப்போது அனுப்பும் தப்பாது ஆத்துமாக்கள் உயிரடைய அக்கினியாய் பற்றி எரிய ஆதிமெய் சபையில் ஆண்டவன் அளித்த பூர்வீகமான தேவாவி பேதையர் நாங்கள் ஞானமடைய தேவையான ஆவி ஊற்றும் - எம் பேதமையாவையும் நீக்கும் பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி தேவையான சர்வாயுதமும் அலகையை ஜெயிக்க ஆவியும் ஈவும் வல்லமையும் - இப்போ தாரும் மாசில்லாமலே எம்மைக்காரும் கூப்பிட்டால் வருவேன் என்றுரைத்தீரே கூடிடும் உம்மடியார் மீதே குறைவை அகற்றி நிறைவை அருள விரைவாகவே இப்போ வாரும் அருள்மாரியை எம்மேல் ஊற்றும் ஆவியால் அடியாரை நிறைத்திடுமையா அதிசய கிரியைகள் செய்திடவே எல்லோரும் இயேசுவை அறிந்திட செய்ய கள்ள மெல்லாம் அகற்றிடவே கர்த்தனை ஸ்தோத்தரித்திடவே