பாடல் #37991
இயேசு தான் வல்ல தேவனே
🔤 Yesu Thaan Valla Devanae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தான் வல்ல தேவனே இதயத்தில் வாசம் பண்ணும் ஜீவனே என்று நாமே போற்றுவோமே எண்ணில்லா நன்மை செய்யும் இயேசு தேவனே குற்றமற்ற தேவனே என் பாவம் முற்றும் தீர்ப்போனே உற்றவர்க்கும் மற்றவர்க்கும் கொற்றவனாய் வந்தோனே அன்பு கூர்ந்து அடி பணிந்தால் எண்ணிலா நன்மை செய்யும் இயேசு தேவனே பாவமில்லா தேவனே என்பாவம் நீக்க வந்தோனே சாபம் ரோகம் யாவும் நீக்க சக்திதந்த தேவனே தஞ்சம் என்று கெஞ்சி வந்தால் அஞ்சிடேல் என்றணைக்கும் இயேசு தேவனே நீதிமான் களில்லையே நேசர் இயேசு போலவே சுத்தம் செல்வம் நற்சகாயம் சமாதானம் கொள்ளவே நன்றியுள்ள நெஞ்சத்தோடு அண்டினால் ஆசீர் அருளும் அன்பு தேவனே சோதனை சகித்தவர் பாடனுபவித்தவர் சோதிக்கப் படுபவர்க்கு உதவி செய்ய வல்லவர் பாவ பேயை சாகழித்து ஜீவனை தந்து மீட்ட தேவ தேவனே சுத்த தேவ ஆவியே நித்தம் நம்மில் மேவியே குற்றமற்ற ஜீவியம் செய்ய வழி நடத்தும் நம்மையே காத்திருந்தால் புதிய ஞானம் பரத்திலிருந் தருளும் பரிசுத்த ஆவியே சாத்தானை மிதித்தவர் மரணத்தை ஜெயித்தவர் மரித்துயிர்த்து பரத்தில் சென்று பரிந்து பேசுகின்றவர் கிருபை காலம் நம்மை தாங்க பொறுமையாய் வேண்டி நிற்கும் இயேசு தேவனே நியாய தீர்ப்பு நெருங்குதே தேவ கிருபை தாங்குதே ஜீவ வார்த்தை ஒவ்வொன்றாக நிறைவேறி வருகுதே பாவியே நீ ஓடிவந்து தாவியே இயேசுபாதம் அண்டிக்கொள்ளுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Thaan Valla Devanae Idhayatthil Vaasam Pannum Jeevanae Enru Naamae Porruvomae Ennillaa Nanmai Seyyum Yesu Devanae Kurtramartra Devanae En Paavam Murrum Theerpponae Urtravarkkum Martravarkkum Kortravanaay Vanthonae Anpu Koornthu Ati Paninthaal Ennilaa Nanmai Seyyum Yesu Devanae Paavamillaa Devanae Enpaavam Neekka Vanthonae Saabam Rogam Yaavum Neekka Sakthidhandha Devanae Thanjjam Enru Kenjsi Vanthaal Anjsitael Endranaikkum Yesu Devanae Neethimaan Kalillaiyae Naesar Yesu Polavae Suttham Selvam Narsakaayam Samaathaanam Kollavae Nanriyulla Nenjjatthotu Antinaal Aaseer Arulum Anpu Devanae Sodhanai Sakitthavar Paadanubavitthavar Sothikkap Patubavarkku Udhavi Seyya Vallavar Paava Paeyai Saagazhitthu Jeevanai Thanthu Meetta Thaeva Devanae Suttha Thaeva Aaviyae Nittham Nammil Maeviyae Kurtramartra Jeeviyam Seyya Vazhi Natatthum Nammaiyae Kaatthirunthaal Puthiya Njaanam Paratthilirun Tharulum Parisuttha Aaviyae Saatthaanai Mithitthavar Maranatthai Jeyitthavar Maritthuyirtthu Paratthil Senru Parinthu Paesukindravar Kirupai Kaalam Nammai Thaangga Porumaiyaay Vaenti Nirkum Yesu Devanae Niyaaya Theerppu Nerungkuthae Thaeva Kirupai Thaangkuthae Jeeva Vaartthai Ovvonraaga Niraivaeri Varukuthae Paaviyae Nee Otivanthu Thaaviyae Yesupaadham Antikkolluvaay