பாடல் #3797
ராஜன் தாவீதூரிலுள்ள
🔤 Raajan Thaaveethoorilulla
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக்கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே; மாதா மரியம்மாள் தான் பாலன் யேசுகிறிஸ்துதான். 2. தேவனால் அனுப்பட்ட உலக ரட்சகர் தாம் அவர் வீடோ மாட்டுக்கொட்டில் தொட்டிலோ முன்னணையாம்; ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய். 3. சாந்தமுள்ள கன்னி கையில் பாலனாகத் தூங்கினார்; தம் மாதாவை நோக்கிப் பார்த்து நேசத்தோடு வளர்ந்தார்; அவர் போல் கீழ்ப்படிவோம்; சாந்தத்தோடு நடப்போம். 4. பாலகர்க்கேற்ற பாதை காட்டப் பாலனாக வளர்ந்தார்; பலவீன மாந்தன் போலத் துன்பம் துக்கஞ் சகித்தார்; இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும். 5. நம்மை மீட்ட நேசர் தம்மைக் கண்ணால் கண்டு களிப்போம்; அவர் தாமே நித்ய ராஜ்ய நாதர் என்று அறிவோம்; பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே. 6. மாட்டுத் தொழுவத்திலல்ல ராஜ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜக்ரீடஞ் சூடியும் ரட்சகர் வீற்றிருப்பார்; பாலர் சூழ்ந்து போற்றுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Raajan Thaaveethoorilulla Maattukkottil Onrilae Kanni Maathaa Paalan Thannai Munnanaiyil Vaitthaarae; Maathaa Mariyammaal Thaan Paalan Yaesukiristhuthaan. 2. Devanaal Anuppatta Ulaka Ratsakar Thaam Avar Veeto Maattukkottil Thottilo Munnanaiyaam; Aezhaiyotu Aezhaiyaay Vaazhnthaar Poovil Thaazhmaiyaay. 3. Saandhamulla Kanni Kaiyil Paalanaagath Thoongkinaar; Tham Maathaavai Nokkip Paartthu Naesatthotu Valarnthaar; Avar Pol Keezhppativom; Saandhatthotu Natappom. 4. Paalakarkkaertra Paathai Kaattap Paalanaaga Valarnthaar; Palaveena Maandhan Polath Thunbam Thukkanj Sakitthaar; Inba Thunba Naalilum Thunai Seyvaar Namakkum. 5. Nammai Meetta Naesar Thammaik Kannaal Kantu Kalippom; Avar Thaamae Nithya Raajya Naadhar Enru Arivom; Paalarai Anpaagavae Thammidatthil Saerppaarae. 6. Maattuth Thozhuvatthilalla Raaja Aasanatthilum Aezhaik Kolamaaga Alla Raajakreedanj Sootiyum Ratsakar Veerriruppaar; Paalar Soozhnthu Porruvaar.