பாடல் #379
ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும்
🔤 Aandavar Nam Yesuvai Aayiram Thuthigalaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் நம் இயேசுவை ஆயிரம் துதிகளாலும் ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ ஆவியின் சந்தோஸமே எமக்களித்தாரே ஆதியும் நீரே என் அந்தமும் நீரே மாறிடா நேசரே எந்தன் இயேசுவே 2. எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ – எம்முள்ளந்தான் நன்றியால் நிறைந்து பொங்குதே – ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே 3. சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும் – சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க – பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே 4. இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க ஆர்ப்பரிப்போடாரவாராம் எங்கும் தொனிக்க அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே 5. இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம் இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே 6. உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ் தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம் தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே 7. எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி – ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே – ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Nam Yesuvai Aayiram Thuthigalaalum Aarpparitthu Porrida Naam Aayatthamallo Aaviyin Santhosamae Emakkalitthaarae Aathiyum Neerae En Andhamum Neerae Maaritaa Naesarae Endhan Yesuvae 2. Ennillaa Em Thunbanggal Engku Poy Ozhindhatho – Emmullanthaan Nanriyaal Nirainthu Pongkuthae – Aegamaay Ellorum Kooti Sthottharippomae 3. Suyaatheena Aaviyaal Silar Satthiyam Vittotinum – Sakthiyeenthu Saatsiyaaga Inrum Nilaikka – Pakthiyil Vairaakkiyam Emakkalitthaarae 4. Yesu Em Patsam Nirka Eena Saatthaanum Thorka Aarpparippotaaravaaraam Engkum Thonikka Allaelooyaa Vallamaiyaayp Paatituvomae 5. Itukkamaana Vazhiyae Inbak Kaanaan Aegavae Innum Avarotu Koodap Paatu Sakippom Inrum Enrum Yesuvotu Aatsi Seyvomae 6. Unnatha Maa Devanin Uyarndha Settaigalin Keezh Thanjjamena Anjsitaamal Thangki Vaazhuvom Theengku Naatkal Theeviram Em Mun Nerungkirrae 7. Erusalaemae Aarppari Seeyonae Nee Kempeeri – Aayiram Pathinaayiram Vin Thoodharudanae – Aasai Manavaalan Yesu Thaam Varukiraar